ஒரு ட்வீட் போட்ட காஜல்: விளாசிய நெட்டிசன்ஸ், பாராட்டிய சவ்கிதார்கள்
Recommended Video

சென்னை: நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ஆதரவாக ட்வீட் போட்ட காஜல் அகர்வாலை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாகியுள்ளது. அந்த படம் வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது. விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் மோடி படத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் போட்டார் நடிகை காஜல் அகர்வால்.
காஜல்
நரேந்திர மோடி படம் குறித்து விவேக் ஓபராய் போட்ட ட்வீட்டை பார்த்த காஜல், வாவ் விவேக். படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். இந்த படம் கண்டிப்பாக நன்றாக போகும் என்று கமெண்ட் போட்டார்.
மோடி
மோடி படம் குறித்து காஜல் அகர்வால் போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை சங்கியா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சவ்கிதார்
பி.எம். நரேந்திர மோடி படத்தை பெரும்பாலான பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது காஜல் மட்டும் துணிந்து ட்வீட் போட்டதை பார்த்த சவ்கிதார்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
உதயநிதி
காஜல் அகர்வாலின் ட்வீட்டை பார்த்த ஒருவர் அவரை வைத்து தமிழ் படங்களை தயாரிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











