twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஜல் அகர்வாலுக்கு சுவிஸ் ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

    By Mayura Akilan
    |

    காஜல் அகர்வால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் ஒரு கடிதம் தான் 'ஜில்லா'வில் காஜல் அகர்வாலின் நடிப்பை பார்த்த சுவிட்சர்லாந்து ரசிகரான வினோ என்பவர் காஜலுக்கு ஈமெயிலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதையெல்லாம் விட காஜலை ஆச்சர்யப்படுத்தியது அந்த ரசிகர் வைத்த வேண்டுகோள் ஒன்று தான்.

    நடிப்பில் கவர்ந்த காஜல்

    நடிப்பில் கவர்ந்த காஜல்

    ரசிகர் எழுதிய கடிதத்த்தில் காஜல் நடித்த படங்களில் அவரது நடிப்பையும், அவர் எவ்வாறு ரசிகர்களை தனது நடிப்பால் மகிழ்விக்கிறார் என்றும் மிகவும் ஆழமாக எழுதியிருந்ததோடு, பென்சிலால் வரையப்பட்ட காஜல் அகர்வாலின் விதவிதமான ஓவியங்களையும் அத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார்.

    ரசிகர் வேண்டுகோள்

    ரசிகர் வேண்டுகோள்

    அப்படி என்ன வேண்டுகோள் என்கிறீர்களா? 2009ல் பாலிவுட்டில் வெளியான ‘வாட்ஸ் யுவர் ராசி?" என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் காஜல் நடிக்கவேண்டுமாம்.

    12 கெட் அப்பில் காஜல்

    12 கெட் அப்பில் காஜல்

    சரி அப்படி என்ன அந்தப்படத்தில் விசேஷம்..? அந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா சோப்ரா 12 கெட்டப்புகளில் நடித்திருப்பார். திருமணம் செய்ய நினைக்கும் ஒருவன் ஒரு ராசிக்கு ஒரு பெண் வீதம் பார்த்து அதில் ஒருவரை திருமணம் செய்ய நினைக்கிறான். அந்த 12 கேரக்டர்களிலும் பிரியங்கா தான் நடித்திருந்தார்.

    உருகிய காஜல்

    உருகிய காஜல்

    இப்படி ஒரு சவாலான வேடத்தில் நடிக்கும் அளவுக்கு தன்னை உயரமான இடத்தில் வைத்து பார்க்கும் பாஸிட்டிவான கருத்துக்களுடன் வந்த அந்த ரசிகரின் கடிதம் காஜலை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது.

    English summary
    Kajal Aggarwal whose Tamil movie 'Jilla' just released has received a mail from a fan, Vino, based in Switzerland. Kajal says, “I was overwhelmed by Vino’s way of expressing his affection towards me. When fans go out of their way to express their love for you, it feels incredible for any artiste. A positive feedback like this from your fan definitely boosts your morale and makes you want to work even harder to continue pleasing them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X