அதை மட்டும் சொல்ல மாட்டேன்... சொன்னா கொன்னே போட்டுருவாங்க... நடிகை காஜல் அகர்வால் கப்சிப்

By

சென்னை: நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் 85 வயது பாட்டியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்துவருகிறார். நடிக்கிறார். இதில் 85 வயது பாட்டியாக அவர் நடிக்கிறார். இந்தியில் மும்பை சாகா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேடம் டுசாட்ஸ்

மேடம் டுசாட்ஸ்

இதற்கிடையே, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால், செய்தியாளர்களிடம் பேசினார்.

85 வயது பெண்

85 வயது பெண்

அப்போது, கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 85 வயது பெண்ணாக நடிக்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பது சவாலானதுதான். இதற்கு மேல் படம் பற்றி சொன்னால், படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள் என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

இதன் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்குகிறது. இதுபோன்ற கேரக்டரை இதற்கு முன் பண்ணியதில்லை. இந்தப் படத்தை அடுத்து துல்கர் சல்மான் ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X