பாகுபலி கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால்: ராஜமெளலிக்கு டெடிக்கேட் செய்த சூப்பர் க்ளிம்ப்ஸ்

மும்பை: தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வல் கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் செய்தார்.

திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காஜல் அகர்வால்.

இந்நிலையில், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாலிவுட் டூ கோலிவுட்

பாலிவுட் டூ கோலிவுட்

ரசிகர்களின் ரசகுல்லாவான காஜல் அகர்வால், முதலில் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படியே டோலிவுட் வழியாக கோலிவுட்டில் 'பழனி' படத்தில் பரத்துடன் நடித்து, தமிழிலும் அறிமுகமானார். தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்த 'மஹதீரா' திரைப்படம், அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை பெற்றுக்கொடுத்தது.

தமிழில் அசத்திய காஜல் அகர்வால்

தமிழில் அசத்திய காஜல் அகர்வால்

தமிழிலும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல', சூர்யாவுடன் 'மாற்றான்', விஜய்யுடன் 'துப்பாக்கி', 'ஜில்லா', 'மெர்சல்', தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி', அஜித்துடன் 'விவேகம்' ஆகிய படங்களில் நடித்து ஒருரவுண்டு வந்தார். இறுதியாக கமலுடன் 'இந்தியன் 2' படத்தில் கமிட் ஆகிருந்த காஜல், அதிலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து, ரீ என்ட்ரீ கொடுக்க ரெடியாகவுள்ளார்.

குழந்தையுடன் என்ஜாய் செய்யும் காஜல்

குழந்தையுடன் என்ஜாய் செய்யும் காஜல்

முன்னணி நடிகையாக வலம்வரும் போதே, 2020ல் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் காஜல் அகர்வால். இந்நிலையில், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், முழுக்க முழுக்க ரெஸ்ட் மோடில் இருந்து வருகிறார். இதனிடையே ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தனது குழந்தை நீல்-ஐ, பாகுபலி போஸ்டருடன் ஷேர் செய்துள்ளார்.

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால்

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால்

அதாவது, பாகுபலி படத்தில் பிரபாஸ் குழந்தையாக இருக்கும் போது, அவரது காலை எடுத்து கட்டப்பாவான சத்யராஜ் தனது தலையில் வைப்பார். அதே காட்சியை ரீ கிரியேட் செய்துள்ளார் காஜல் அகர்வால். தனது குழந்தை நீலின் காலை எடுத்து, தனது தலையில் வைத்து போட்டோ எடுத்து, அதை ராஜமெளலிக்கு டெடிக்கேட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார் காஜல் அகர்வால். அந்த போட்டோவின் பின்னணியில் 'பாகுபலியின்' தீம் இசையும் ஒலிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X