ம்ஹூம்... அதை மட்டும் கேட்காதீங்க... காஜல் அகர்வால் கப் சிப்

By

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்துகொள்ள இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

மும்பை சாகா

மும்பை சாகா

இவர் நடித்துள்ள மும்பை சாகா என்ற இந்தி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் ஜான் ஆப்ரஹாம், இம்ரான் ஹாஸ்மி ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதற்கிடையே, கிடைத்த கேப்பில், குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவுக்குச் சென்று வந்துள்ளார். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மெழுகு சிலை

மெழுகு சிலை

இவரது மெழுகு சிலை, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட இருக்கிறது. இதன் திறப்பு விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது. தென்னிந்திய நடிகை ஒருவருக்கு வைக்கப்படும், முதல் மெழுகு சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக

முதல் முறையாக

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்துகொள்ள இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். 'இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டாலும் நான் பங்குபெறும் காட்சிகள் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் முதன் முறையாக கலந்துகொள்ள போகிறேன்.

ஆவலாக இருக்கிறேன்

ஆவலாக இருக்கிறேன்

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றும் தினத்தை, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது' என்ற காஜல் அகர்வாலிடம், படத்தில் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்களேன் என்றால், 'ம்ஹூம்... அதை மட்டும் கேட்காதீங்க... சொல்ல மாட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.

அவர் தாத்தா கமலுக்கு ஜோடியாக, வயதான கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X