தளபதி 65.. 4வது முறையாக ஜோடி சேர விருப்பம் தெரிவித்துள்ள பிரபல நடிகை.. ஓகே சொல்வாரா மாஸ்டர்?
சென்னை: தளபதி 65 படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
விஜய், முருகதாஸ் கூட்டணியில் 2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் பட்சத்தில், துப்பாக்கி முதல் பாகத்தில் கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்து விஜய்யை தேடி பிடித்த காஜல் அகர்வால், மீண்டும் அவருடன் இணைய ரெடியாகி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதால், தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

4வது முறை
துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், தொடர்ந்து, ஜில்லா, மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி 65 படம் துப்பாக்கி 2வாக ரெடியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில், 4வது முறையாக விஜய்யுடன் நடிக்க தனது சம்மதத்தை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஃபேவரைட் ஹீரோயின்
தளபதி விஜய்யின் ஃபேவரைட் ஹீரோயின் பட்டியலில் நடிகை காஜல் அகர்வாலுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. துப்பாக்கி படத்தில், விஜய்யுடன் காஜல் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள், மற்றும் கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜில்லா படத்தில் போலீஸ் கெட்டப்பிலும், மெர்சலில் மேஜிக் மேன் விஜய்க்கு ஜோடியாகவும் அசத்தலாக நடித்திருப்பார்.

கைவசம் நிறைய
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகையான காஜல் அகர்வால் கைவசம் தற்போது, இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ், துல்கர் சல்மான் உடன் ஹேய் சினாமிகா உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன. கோமாளி வெற்றிக்கு பிறகு, தமிழிலும் காஜலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

ஓகே சொல்வாரா மாஸ்டர்
மெர்சல் படத்திற்கு பிறகு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மாளவிகா மோகனுடன் நடித்து வரும் நடிகர் விஜய், மீண்டும் காஜல் அகர்வால் உடன் ஜோடி சேர ஓகே சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. துப்பாக்கி 2 படம் என்பது உறுதியானால், காஜல் அகர்வால் உடன் இன்னொரு ஹீரோயினும் படத்தில் நடிப்பார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏப்ரல் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











