தெலுங்கு பட அதிபரை காதலிக்கும் காஜல்: புதுப்படங்களை தட்டிக்கழிக்கிறார்
சென்னை: காஜல் அகர்வால் தெலுங்கு பட அதிபர் ஒருவரை காதலிக்கிறாராம். அதனால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் தட்டிக்கழிக்கிறாராம்.
காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கு பட அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பட அதிபர் ஆந்திராவில் பெத்த பணக்காரராம். அதனால் அவரது பெயரை கசியவிடாமல் ரகசியம் காக்கின்றனர். இந்த காதல் விவகாரத்தால் தான் காஜல் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் தட்டிக்கழித்து வருகிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அவர் கையில் ஒரு தெலுங்கு படம் கூட இல்லை.

பவனுக்கு பாய் பாய்
பவன் கல்யாண் ஜோடியாக கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க காஜல் பெரிய தொகையை கேட்டதால் அந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு சென்றது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் தட்டிக்கழிக்க காரணம் காதலாம்.

கமலுக்கும் நோ நோ
லிங்குசாமி தயாரிக்கும் கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் காஜல் ஏற்றுக்கொள்ளாததற்கு காதல் தான் காரணமாம்.

2 தமிழ் படங்கள் மட்டுமே
காஜல் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றை முடித்துவிட்டால் அவர் கையில் படங்களே இல்லை.


Click it and Unblock the Notifications











