தள்ளிப்போகும் இந்தியன் 2 படப்பிடிப்பு: கமலுக்காக புது வித்தை கற்கும் காஜல் அகர்வால்
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்திற்காக புது வித்தை ஒன்றை கற்று வருகிறாராம் காஜல் அகர்வால்.
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்க உள்ள படம் இந்தியன் 2. ரூ. 2 கோடியில் பிரமாண்ட செட் போடும் பணி நடந்து வருகிறது. செட் வேலை நினைத்ததை விட கூடுதல் நேரம் எடுக்கிறதாம்.
இந்த காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது என்று கூறப்படுகிறது.

ஜனவரி
டிசம்பர் மாதம் 14ம் தேதி படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருந்தார் ஷங்கர். இந்நிலையில் செட் அமைக்கும் வேலை இன்னும் முடியாததால் ஜனவரி மாதம் படப்பிடிப்பை துவங்குகிறார்களாம். இதற்கிடையே கமல் ஹாஸனும், காஜல் அகர்வாலும் படப்பிடிப்புக்காக தயாராகி வருகின்றனர். கமல் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

காஜல் அகர்வால்
இந்தியன் படத்தில் அப்பா கமல் வர்மக் கலையை பயன்படுத்தினார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல் தவிர்த்து காஜலும் வர்மக் கலையை பயன்படுத்துவது போன்று காட்சிகள் உள்ளதாம். இதற்காக காஜல் அகர்வால் வர்மக் கலை கற்றுக் கொண்டிருக்கிறாராம். நல்லது தான், நிஜ வாழ்க்கையிலும் உதவும்.

2020
இந்தியன் 2 படம் 2020ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். 22 ஆண்டுகள் கழித்து ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்பதை நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

யார்?
இந்தியன் படத்தில் சுகன்யாவுக்கு அம்மா கெட்டப் போட்டார்கள். இந்தியன் 2 படத்தில் அம்மா யார் என்று தெரியவில்லையே. ஒரு வேளை சுகன்யாவையே அம்மாவாக நடிக்க வைப்பாரோ ஷங்கர்?


Click it and Unblock the Notifications











