கல்யாணமா, ஆளைவிடுங்க சாமி: காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு தற்போதைக்கு கல்யாணம் பண்ணும் மூடில்லையாம்.

பரத்துடன் சேர்ந்து பழனி
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால் பரத் நடித்த பழனி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கோலிவுட்டில் நிலைக்க போராட்டம்
பழனியைத் தொடர்ந்து சரோஜா, மோதி விளையாடு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரால் கோலிவுட்டில் தெலுங்கு போன்று பெரிய அளவுக்கு வர முடியவில்லை.

அடிச்சது ஜாக்பாட்
இந்நிலையில் தான் அவர் விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அந்த 2 படங்களிலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதால் படுகுஷியாக உள்ளார்.

மணிரத்னத்திற்காக காத்திருப்பு
காஜல் அகர்வாலுக்கு இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசையாம். அவருடைய ஒரு படத்திலாவது நடித்துவிடமாட்டோமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

டேட்டிங், கல்யாணம்
பிசியாக இருக்கும் தான் யாரையும் டேட் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைக்கு கல்யாணம் பண்ணும் மூடும் இல்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











