காஜல் அகர்வாலால் செம கடுப்பில் இருக்கும் ஹன்சிகா!
சென்னை: ஹன்சிகா காஜல் அகர்வாலால் செம கடுப்பில் உள்ளாராம்.
ஹன்சிகா நடித்த வேட்டை படம் அண்மையில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் தற்போது சிங்கம் 2, பிரியாணி, வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு பட வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படி கோலிவுட்டில் போட்டியே இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார் ஹன்சிகா. இத்தனை படங்களில் நடித்தாலும் அம்மணி செம கடுப்பில் உள்ளாராம்.

ஆந்திராவில் அமலா பால், சமந்தா
தமிழில் ஹன்சிகாவுக்கு போட்டியாக இருந்த அமலா பால், சமந்தா ஆகியோர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து வந்த காஜல்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் தற்போது கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா மற்றும் விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழ் படங்களுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இது குறித்து அறிந்த தமிழ் இயக்குனர்கள் சிலர் அவரை தங்கள் படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பபந்தம் செய்துள்ளார்களாம்.

கடுப்பில் ஹன்சிகா
தனிக்காட்டு ராணியாக இருந்த ஹன்சிகா தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் காஜல் அகர்வாலால் செம கடுப்பில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











