விஜய்யின் ஜில்லாவுக்கு வர மாட்டேன்: காஜல் தங்கச்சி நிஷா
சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் மகத் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் மறுத்துவிட்டாராம்.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், மகத் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ஜில்லா. இதில் மதுரைக்காரராக வருகிறார் விஜய். காஜலுக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறோம். அவர் அக்காவைப் போன்று தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில் நடித்த இஷ்டம் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
இந்நிலையில் ஜில்லா படத்தில் நடிக்க நிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜில்லாவுக்கு வர மாட்டேன்
ஜில்லா படத்தில் விஜய்யின் தம்பியாக நடிக்கும் மகத்துக்கு ஜோடியாக நடிக்க நிஷாவை கேட்டார்களாம். ஆனால் சிறிய கதாபாத்திரங்களில் எல்லாம் என் தங்கை நடிக்க மாட்டார் என்று காஜல் சொல்லிவிட்டாராம்.

நிஷா நல்லா வருவாள்
என் தங்கை நிஷா நல்லா வருவாள். பெரிய நடிகை ஆவாள் என்று அக்கா காஜல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஷ்டம் ஓடாட்டா என்ன?
நிஷா நடித்த முதல் தமிழ் படமான இஷ்டம் ஓடாவிட்டால் என்ன, நான் கூட ஆரம்பத்தில் நடித்த தமிழ் படங்கள் ஓடவில்லை. பொறுமையாக இருந்து நடித்ததில் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. அது போன்று தான் என் தங்கைக்கும் என்றார் காஜல்.


Click it and Unblock the Notifications











