குருவே நான் அப்படிச் சொல்லலை... பாரதிராஜாவுடன் பேசத் துடிக்கும் காஜல் அகர்வால்...!
திமிர் பிடித்த காஜல் அகர்வாலை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியதால் காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இதையடுத்து அவரை சமாதானப்படுத்த போனில் பேச முயற்சிக்கிறாராம். ஆனால் பாரதிராஜா பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவைத் தாழ்த்தியும், தெலுங்கு சினி்மாவை உயர்த்தியும் பேசியிருந்தார் காஜல் அகர்வால்.
தெலுங்கு சினிமா ரொம்ப உயர்வாக இருக்கிறது. அங்கு ஹீரோயின்களுக்கு மதிப்பளிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. ஹீரோக்களைத்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள், நாயகிளை மதிப்பதே இல்லை என்று கூறியிருந்தார்.

கடும் கோபமடைந்த பாரதிராஜா
காஜலின் இந்தப் பேச்சு பாரதிராஜாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. பொம்மலாட்டம் படம் மூலம் காஜலை சினிமாவுக்குக் கொண்டு வந்ததே பாரதிதராஜான் என்பது நினைவிருக்கலாம்.

திமிர் பிடித்த காஜல்
காஜல் பேச்சு குறித்துக் கருத்து தெரிவித்த பாரதிராஜா, திமிர் பிடித்த காஜல் அகர்வாலை நான் அறிமுகப்படுத்தினேன் என்பது எனக்கு வருத்தமும், வேதனையும் தருகிறது என்று கூறியிருந்தார் பாரதிராஜா.

அதிர்ச்சியில் காஜல்
தனது பேச்சு குறித்து மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார் காஜல். ஆனால் பாரதிராஜா கடுமையாக திட்டியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நான் அப்படிப் பேசவில்லையே...
தான் அப்படிப் பேசவில்லை என்றும் பேட்டியை திரித்து விட்டார்கள் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் காஜல்.மேலும் பாரதிராஜாவிடம் விளக்கம் அளிக்க அவருடன் பேசவும் முயன்றாராம். ஆனால் பாரதிராஜா பேச மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் காஜல்.

குறிப்பிட்ட ஹீரோக்களுக்கு மட்டுமே
ஏற்கனவே குறிப்பிட்ட ஹீரோக்களுக்கு மட்டுமே கால்ஷீட் தருவேன், கூட நடிப்பேன் என்று காஜல் பிகு பண்ணுவதாக ஒரு சர்ச்சை உள்ளது. இந்த நிலையில் தற்போது தனது பேச்சால் தமிழ் சினிமாக்காரர்களால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











