ஆக்ஷனில் விஜய்க்கு சற்றும் சளைக்காத காஜல்
சென்னை: ஜில்லா படத்தில் காஜல் அகர்வால் விஜய்க்கு சமமாக ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறாராம்.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் ஜில்லா. துப்பாக்கியை அடுத்து இந்த ஜோடி ஜில்லாவில் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கிறது.துப்பாக்கியில் காஜல் விஜய்யுடன் டூயட் பாட மட்டுமே இருந்தார். ஆனால் ஜில்லாவில் அப்படி அல்ல.
ஜில்லாவில் விஜய்க்கு சமமாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளாராம் காஜல்

போலீஸ் அதிகாரி
ஜில்லாவில் காஜல் போலீஸாக வருகிறாராம். போலீஸ் சீருடை அணிந்து வந்தபோது அவரைப் பார்த்த விஜய்யும், மோகன் லாலும் இந்த டிரஸ் உங்களுக்கு சூப்பராக உள்ளது என்று பாராட்டினார்களாம்.

டிப்ஸ்
ஜில்லாவில் காஜல் அகர்வால் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க காஜலுக்கு விஜய் தான் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில்
ஜில்லா படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடத்தினால் கதை எப்படியாவது கசிந்துவிடுகிறதாம்.

விஜயசாந்தி
ஜில்லாவை அடுத்து இனி வரும் படங்களில் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்று காஜல் முடிவு செய்துள்ளாராம். அடுத்த விஜயசாந்தி ஆக ஆசைப்படுகிறார் போல.


Click it and Unblock the Notifications











