காஜல் போய் இப்படி ஒரு மோசமான காட்சியில் நடிக்கலாமா?: ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended Video

சென்னை: பாரீஸ் பாரீஸ் டீஸரில் காஜல் வந்த ஒரு காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர்.
இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். பாரீஸ் பாரீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துவிட்டது.

டீஸர்
ரீமேக் என்றாலும் லைட்டாக மாற்றம் செய்துள்ளனர் என்பது டீஸரில் தெரிகிறது. உடை விஷயத்தில் குயீன் படத்தில் நடித்த கங்கனா அணிந்த கிட்டத்தட்ட அதே உடைகள் காஜலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்டீஸரில் வந்த ஒரு காட்சி தேவையில்லாததோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
காஜல்
நடிகை எல்லி அவ்ரம் காஜல் அகர்வாலின் மார்பகத்தை பிடிக்கும் காட்சியை பார்த்து தான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏன் இப்படி கேவலமான காட்சிகளில் எல்லாம் நடிக்கிறீர்கள் என்று காஜலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பக்கத்து வீட்டு பெண்
காஜல் அகர்வால் என்று க்யூட்டாக பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார் என்ற இமேஜ் உள்ளது. அப்படி இருக்கும் போது காஜல் இப்படி ஒரு காட்சியில் நடித்ததால் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.
ரசிகர்கள்
காஜலின் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் அதை மீண்டும் பார்க்கத் துடிக்கும் ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











