பணம், பணம்னு பேயாக அலையும் காஜல் அகர்வால்
Recommended Video

ஹைதராபாத்: பணம், பணம் என்று பேயாக அலைகிறார் காஜல் அகர்வால் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பை பார்த்துவிட்டு அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம். காஜல் நிஜத்தில் அல்ல மாறாக ஒரு படத்தில் தான் பணத்தாசை பிடித்தவராக நடிக்கிறார்.
தேஜா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் காஜல் அப்படி நடித்து வருகிறாராம்.

சீதா
தேஜாவின் படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் காஜல். படத்தின் ஹீரோயின் அவர் தான். ஆனால் பணம் மற்றும் பேராசை பிடித்த நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் காஜல்.

முதல் முறை
காஜலின் கெரியரில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சீக்கிரத்தில் ஏமாறும் அப்பாவி பெண்ணாக நடித்தது தான் அதிகம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து போர் அடிக்கிறது. வித்தியாசமாக நடிக்க விரும்புகிறேன் என்று காஜல் தெரிவித்த நிலையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திருப்தி
பாவம் போன்ற பெண்ணாக நடித்து வரும் காஜலை வேண்டும் என்றே இப்படி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்களாம். அவர் தனது கதாபாத்திரத்தை புதுமையாக கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். அவர் இதுவரை நடித்து முடித்துள்ள காட்சிகளை பார்த்து இயக்குனரும், தயாரிப்பாளரும் திருப்தி அடைந்துள்ளார்களாம்.

இந்தியன் 2
தமிழில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் காஜல். இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் மூலம் தனது கெரியரில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறுகிறார் அவர். கமல், ஷங்கருடன் சேர்ந்து வேலை செய்யப் போவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக காஜல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











