துப்பாக்கி படத்தை காஜல் அகர்வால் எப்போ பார்த்தார் தெரியுமா?
சென்னை: துப்பாக்கி படத்தை அதன் நாயகி காஜல் அண்மையில் தான் பார்த்துள்ளார் என்று உங்களுக்கு எல்லாம் தெரியுமா?

துப்பாக்கி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்தின் ஹீரோயினான காஜல் அகர்வால் ஊர், உலகமெல்லாம் படத்தைப் பார்த்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்தில் உள்ள சினிமேக்ஸில் பார்த்துவிட்டு அட படம் நல்லா வந்துருக்கே என்று லேட் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டாரே படத்தை இரண்டு வாட்டி பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு வரும் காஜலுக்கு யூனிட் சாப்பாடு சுத்தமாகப் பிடிக்காதாம். அதனால் ஷூட்டிங் வரும்போது தனது சமையல்காரரையும் கையோடு அழைத்து வந்துவிடுவாராம்.
என்ன விஜய் உங்க ஸ்வீட் கேர்ள் பிரண்ட் இப்படி இருக்கிறாரே?


Click it and Unblock the Notifications











