பொல்லாதவனை மிஸ் பண்ணி 'மாரி'க்கு ஜோடியான காஜல் அகர்வால்
சென்னை: பொல்லாதவன் படத்தில் தனுஷுடன் நடிக்க முடியாமல் போன காஜல் தற்போது மாரி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
அனேகன், ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் பாலாஜி மோகனின் மாரி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால். வெற்றிமாறன் தனுஷை வைத்து எடுத்த பொல்லாதவன் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதில் திவ்யா நடித்தார்.

இந்நிலையில் தான் காஜல் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தை ராதிகாவின் மேஜிக் பிரேம்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்கின்றன.
காஜல் அகர்வாலுக்கு குட் லக் என்று ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். புதிய கதாபாத்திரம், புதிய குழு என்பதால் தனுஷும் இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
மாரியில் ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











