இயக்குனரை கலங்கடிக்கும் கஜாலா
ஜோர் படத்திற்குப் பிறகு வாய்பில்லாமல் இருந்த கஜாலா இப்போது ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் கஜாலா. யுனிவர்சிட்டி, ஏழுமலை ஆகிய படங்களில் நடித்த கஜாலாஇடையில் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் நல்லவேளையாககாப்பாற்றப்பட்டார்.
ஆனாலும் அந்த தற்கொலை முயற்சியால் ரிஸ்க் எடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள், அடுத்து அவரை புக் செய்யமுன்வரவில்லை. இதனையடுத்து பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த கஜாலா ஒரு பேட்டியில்,
வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிந்து விட்டேன். இனி காதலிக்கவும் மாட்டேன்; தற்கொலை செய்யவும்மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார்.
இதன் பின்புதான் அவர் எடுத்த முயற்சிகளின் பலனாக, ஜோர் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகிடைத்தது.
படம் சுமாராக போகவே, இப்போது ராம் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மெளனம் பேசியதே படத்தின் இயக்குனர் அமீர்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளரும் அவரே.
குறைந்த செலவில் நிறைந்த வெண்மை என்ற கணக்கில்தான் கஜாலாவைப் படத்தில் போட்டார். ஆனால்படப்பிடிப்பில் இவர் அடிக்கும் கூத்து இயக்குநரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
பிரேக் விட்டதும் செல்போனை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பிப்பவர், பிரேக் டைம் முடிந்தாலும் ஷாட்டுக்குத்திரும்புவதில்லையாம்.
எங்கே காதல், கத்திரிக்காய் என்று எஸ்கேப் ஆகி விடுவாரோ என்று பயந்த வண்ணம்உள்ளனர் படப்பிடிப்புக் குழுவினர்.
ஆளை மாற்றலாம் என்றால் இதுவரை எடுத்ததெல்லாம் வீணாகி விடுமே என்ற கவலை வேறு. இதனால்படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தாலும் வியர்த்துக் கொட்டியபடி தான் இருக்கிறார் இயக்குனர் அமீர்.


Click it and Unblock the Notifications











