என்னால முடியல, தேனிலவில் இருந்து ஓட்டம் பிடித்த நடிகையின் கணவர்

By Siva

Recommended Video

பப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தேனிலவின் போது ஓட்டம் பிடித்தது குறித்து அவரின் மனைவியான நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிகை கஜோலை காதலித்து கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு நியாசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.

நியாசா வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் திருமணம் பற்றி கஜோல் கூறியதாவது,

நிபந்தனை

நிபந்தனை

திருமணம் செய்யும் முன்பே நான் அஜய்க்கு ஒரு நிபந்தனை விதித்தேன். அதாவது 2 மாதங்கள் தேனிலவு செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன். அவரும் சரி என்று கூறினார். தேனிலவின் போது உலகை சுற்றிப் பார்க்க நான் விரும்பினேன். அஜய் சம்மதித்ததையடுத்து விமான டிக்கெட்டுகளை புக் செய்தோம்.

அமெரிக்கா

அமெரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு சென்றோம். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ் என்று ஒவ்வொரு இடமாக சென்றோம். பின்னர் கிரீஸுக்கு சென்றோம். அதற்குள் 40 நாட்கள் ஓடிவிட்டது. 40 நாட்களிலேயே அஜய் சோர்வடைந்துவிட்டார். ஒரு நாள் காலை என்னை எழுப்பி தனக்கு காய்ச்சல் மற்றும் தலைவலியாக இருப்பதாக கூறினார்.

வீடு

வீடு

காய்ச்சல், தலைவலி என்றால் மருந்து வாங்கித் தருகிறேன் என்று நான் அஜய்யிடம் கூறினேன். ஆனால் அவரோ எனக்கு உடம்புக்கு சரியில்லை என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார். சரி இப்ப அதற்கு என்ன தான் செய்ய என்று கேட்டதற்கு மருந்து வேண்டாம், வீட்டுக்கு போகலாம் என்று கூறினார் அஜய்.

பயணம்

பயணம்

ஒரு தலைவலிக்காக பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டுமா என்று நான் அஜய்யிடம் கேட்டேன். அவரோ என்னால் முடியவில்லை, மிகவும் சோர்வாக உள்ளது என்று மட்டும் கூறினார் என்றார் கஜோல். கஜோல், அஜய் திருமணம் இரு வீட்டார் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மற்றவர்களை அழைக்காமல் ரொம்பவே எளிமையாக திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X