அய்யோ கடவுளே..தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கலைஞர் டிவி சீரியல் நடிகை.. வீட்டில் பிணமாக மீட்பு
சென்னை: கன்னடத் தொலைக்காட்சியில் ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா தொடரிலும் தமிழில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலிலும் நடித்து வந்த நடிகை நந்தினி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டார். திரையில் ஒரு மரணக் காட்சியில் நடித்த பிறகு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது அவரின் ரசிகர்களையும் சக கலைஞர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகையான நந்தினி, பெங்களூரில் வசித்து வந்தார். அவர் ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு மற்றும் நீனாதே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்தார். அவரது நடிப்பு தொலைக்காட்சியில் நடிகைக்கு என்று நல்ல இடத்தை பெற்றுத்தந்தது. கன்னடத்தில் நடித்து வந்த நடிகை நந்தினி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி தொடரில் லீட் ரோலில் நடித்து வந்தார்.பெரும் வரவேற்பை பெற்ற அந்த தொடரில், கனகா மற்றும் துர்கா என சவாலான இரட்டை வேடத்தில் நடித்தார். அந்தத் தொடரில் அவரது நடிப்பு பார்வையாளர்களிடையே அவருக்கு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

கௌரி சீரியல் நடிகை தற்கொலை: நந்தினி நடித்து வந்த 'கௌரி' நேற்று இரவு பெங்களுரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது வரை, நந்தினி மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்த இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பல கலைஞர்கள் நடிகைக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெங்களூருக்கு விரைந்துள்ளனர். அவரது திடீர் மறைவு கன்னட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கௌரி சீரியலின் ஷூட்டிங் ஆரம்பத்தில் பெங்களூருவிலேயே நடந்து வந்த நிலையில், சமீபகாலமாக இந்த சீரியலின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில், நந்தினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடித்து விட்டுத்தான் நந்தினி பெங்களுருக்கு சென்று அவருடன் நடித்த சக நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் - 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கவும்


Click it and Unblock the Notifications











