கலைமாமணி விருது வென்ற சாய் பல்லவி.. யப்பா மேடம்க்கு எவ்வளவு மகிழ்ச்சி பாருங்க.. நெகிழ்ச்சியான பதிவு

சென்னை: கோலிவுட், டோலிவுட்டில் மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் சாய் பல்லவி. இரண்டு மொழிகளில் மட்டும் கலக்கிவந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். அங்கும் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டியிருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதுகுறித்து எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார் பல்லவி.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து அனைரையும் ஒரே படத்தில் கவர்ந்தவர் சாய் பல்லவி. அதில் அவரது நடிப்பு பிரமிப்பைத்தான் கொடுத்தது. முதல் பட வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கொட்டி கிடைத்தாலும், அத்தனை வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், தனது பெயருக்கு களங்கம் வராத கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.

முன்னணி நடிகை: அதன் காரணமாக அவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானரில் இருந்தன. முக்கியமாக அவரது கேரக்டர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இப்படி வரிசையாக படங்கள் வந்ததால் குறுகிய காலத்திலேயே தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி மற்றும் முக்கியமான நடிகையாக மாறினார். அவரை நம்பி எவ்வளவு கனமான கதாபாத்திரத்தையும் எழுதலாம் என்று இயக்குநர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது.

Kalaimamani Award for Sai Pallavi Actress Shares Emotional Note
Photo Credit:

அமரனில் கலக்கிய சாய் பல்லவி: அதேசமயம் தமிழில் தனக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை என்று வருத்தப்படவும் செய்திருக்கிறார் பல்லவி. அப்படிப்பட்ட சமயத்தில்தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணங்களில் சாய் பல்லவியும் ஒருவராக ஜொலித்தார். ஒவ்வொரு சீனிலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி எஸ்கேவைவிடவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார்.

பாலிவுட்டில் சாய் பல்லவி: இப்படி தமிழ், தெலுங்கு என மாறி மாறி கலக்கிவரும் சாய் பல்லவி இப்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார். அதாவது ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக பாலிவுட்டிலும் தனது தடத்தை ஆழமாக பதித்து விரைவில் பான் இந்தியா ஹீரோயினாக மாறுவார் என்று எதிர்பார்க்கலாம். அதற்கான அத்தனை தகுதியும், திறமையும் அவருக்கு இருக்கிறது.

நெகிழ்ச்சியான சாய் பல்லவி: இந்நிலையில் நடிகை சாய் பல்லவிக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது. அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து, "கலைமாமணி என்ற சொல்லை நான் சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்தவள். இன்று அந்த பெருமையான விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையிலேயே பெருமையான ஒன்று. இந்த உயர்ந்த கௌரவத்தை அழைத்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்துக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X