Don't Miss!
- Sports
திறமை இருந்தும் வாய்ப்பில்லை.. நியூசி, உடனான முதல் டி20.. ரிஸ்க் எடுக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா??
- News
மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நடிகை ஓவியாவின் காதலரா? நேரலையில் கட்டிபிடித்து முத்தம் கொடுத்த அந்த நபர் யார்?
சென்னை : இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஒவியா, நேரலையில் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென ஒருவர் அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
இணையத்தில் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள்,யார் அந்த நபர், உங்களின் காதலரா என கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவருக்கு அழகும்,திறமையும் இருந்த போதும், சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
பணம்
தான்
முக்கியம்..
பணத்திற்காகத்
தான்
நடிக்க
வந்தேன்..
பிரபல
நடிகை
ஓபன்
டாக்!

நடிகை ஓவியா
நடிகை ஓவியா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில், குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு காலையில் போடும் பாட்டுக்கு அலுங்காமல் நடனமாடி வந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் கேமராவைப் பார்த்து ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என்று அவர் பேசிய வசனம் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

களவாணி படத்தில்
மலையாளத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஓவியா. நாளை நமதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியாவுக்கு விமல் உடன் அவர் நடித்த களவாணி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு ஓவியா நடித்த பல படங்கள் வெற்றிப் பெறவில்லை.

வெற்றி பெறவில்லை
இதன் பிறகே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியில் வெளியேறினாலும், இவருக்கு என்று தனி ஆர்மி உருவானதால், சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின், 90ml , காஞ்சனா 3 படத்தில் நடித்தார் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அம்மணி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
முத்தம் கொடுத்தவர் காதலரா?
இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வீடியோவில் பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தீடீரென ஒருவர் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் காதலரா, இல்லை ஓவியா அவரை திருமணம் செய்து கொள்ள போகிறாரா என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.