தாலிகட்டாமல் காதலனுடன் வாழ்ந்த நடிகை அம்மா ஆனார்... அழகான பெண் குழந்தை பிறந்தது

By

மும்பை: நடிகை கல்கி கோச்சலினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ள கல்கி, தனக்கு தமிழ் நன்றாகத் தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

பிரச்னைகளை சந்தித்தேன்

பிரச்னைகளை சந்தித்தேன்

அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. ஹாலிவுட் படங்களிலும் சில பிரச்னையை சந்தித்தேன். என்னை தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார். அதற்கு மறுத்து விட்டேன். இதனால் அவர் படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது.

கர்ப்பமானார்

கர்ப்பமானார்

இவர், இப்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள வெப்சீரிஸில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார் நடிகை கல்கி. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கர்ப்பமானார் கல்கி.

நிறைமாத கர்ப்பிணி

நிறைமாத கர்ப்பிணி

தாய்மை அடைந்திருப்பதை பற்றி உருக்கமாக பேசியிருந்த கல்கி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பமான நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான வயிற்றைக் காண்பித்தபடி தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறபபடுகிறது. தாயும் சேயும் நலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X