Don't Miss!
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- News
இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
'அந்த படம் ரிலீசான சமயத்தில் என்னை விபச்சாரி என படுக்கைக்கு அழைத்தனர்'.. கர்ப்பிணி நடிகை வேதனை
மும்பை: தன்னை சிலர் ரஷ்ய விலைமாது என அழைத்ததாக நடிகை கல்கி கோச்லின் கூறியுள்ளார்.
கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் தீவானி உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் பிரெஞ்ச் நடிகை மற்றும் எழுத்தாளர் கல்கி கோச்லின். தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கல்கி. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
நயன்தாரா,
சமந்தா,
அமலா
பால்
யாருக்கு
முதலிடம்..
2019-ன்
டாப்
10
ஹீரோயின்
இவங்கதான்!

லிவிங் டுகெதர்
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கை ஹெல்ஸ்பர்க் என்பவரை கல்கி காதலித்து வருகிறார். இருவரும் லிவிங் டுகெதர் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றனர். கல்கி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

கல்கியின் பேட்டி
இந்நிலையில் கல்கி கோச்லின் ஒரு ஆங்கில இணைய தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தனது கர்ப்பம், காஸ்டிங் கவுச், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்
ஒருமுறை தன்னை தயாரிப்பாளர் ஒருவர் மறைமுகமாக படுக்கைக்கு அழைத்ததாக கல்கி தெரிவித்துள்ளார். அவருடன் டேட்டிங் செல்ல மறுத்ததால், தன்னை அவருடைய படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 'ஏ ஜவானி ஹாய் தீவானி' பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தாலும், அதன் பிறகு தனக்கு ஒன்பது மாதங்கள் படவாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் கல்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விபச்சாரி
மேலும் தேவ் டி படம் வெளிவந்த சமயத்தில் பாலிவுட்டில் தன்னை சிலர் ரஷ்ய விபச்சாரி என அழைத்ததாக கல்கி கூறியுள்ளார். பாலிவுட் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகளை தான் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.