மோகன்லால் மகனை மணக்கிறாரா கல்யாணி பிரியதர்ஷன்?.. நடிகையின் அம்மா ஓபனா சொல்லிட்டாங்களே!

திருவனந்தபுரம்: மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் மகளான கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கூடிய விரைவில் கல்யாணி பிரியதர்ஷனை பிரணவ் மோகன்லால் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கல்யாணி பிரியதர்ஷனின் அம்மா கொடுத்துள்ள விளக்கம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Kalyani Priyadarshan Mother Lissy put full stop for her daughter marriage with Mohanlal s son Pranav

லோகா படத்தின் மூலம் மலையாள திரையுலகின் அனைத்து டாப் ஹீரோக்களின் பாக்ஸ் ஆபீஸையும் கல்யாணி பிரியதர்ஷன் முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், அவரது திருமண பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கத் தொடங்கி உள்ளன.

கல்யாணி பிரியதர்ஷனுக்கு கல்யாணமா?: 33 வயதாகும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்பு ஜோடியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரவி மோகன் உடன் இவர் இணைந்து நடித்த ஜீனி திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. கடந்த ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த சூப்பர் ஹீரோ திரைப்படமான லோகா சாப்டர் ஒன் சந்திரா திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி மலையாள சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. இந்நிலையில், மோகன்லால் மகன் பிரண்வ் உடன் கல்யாணி பிரியதர்ஷனுக்கு விரைவில் திருமணம் என வதந்திகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணமே லிஸி போட்ட விஷு வாழ்த்து போஸ்ட் தான் என்கின்றனர்.

அம்மா மறுப்பு: விஷுவுக்கு வாழ்த்து தெரிவித்து லிஸி போஸ்ட் போட்ட நிலையில், சீக்கிரமே பிரணவ் - கல்யாணி திருமணம் தானே என ஒரு நபர் கமெண்ட் போட, ரசிகர்கள் பலரும் இருவருக்கும் திருமணமா என கேள்விக் கேட்க ஆரம்பித்தனர். இந்நிலையில், பிரியதர்சனின் மனைவியும் கல்யாணி பிரியதர்ஷனின் அம்மாவுமான லிஸி லக்‌ஷ்மி இது முழுக்க முழுக்க வதந்திதான் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என அந்த பதிவிலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் இணைந்து கடந்த 2022ம் ஆண்டு ஹ்ருதயம் படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பின்னர், 2024ம் ஆண்டு வர்ஷங்களுக்கு சேஷம் படத்திலும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மோகன்லால் - பிரியதர்ஷன் இருவருமே நீண்டகாலமாக நண்பர்களாக உள்ள நிலையில், இப்படியொரு வதந்தி உலா வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X