ஆண் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம்.. கண்ணீர் விட்டு கதறும் கல்யாணி பிரியதர்ஷன்.. என்ன ஆச்சு?
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் எப்படி ஹீரோயினாக நடித்து வருகிறாரோ அதேபோல பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் பல வருடங்களாக ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் தான் ஹீரோயின். அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'ஜீனி' படத்திலும் நடித்து வருகிறார்.
1993ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிரியதர்ஷன் மற்றும் லிஸி தம்பதியினருக்கு மகளாக பிறந்த கல்யாணி பிரியதர்ஷன் சிறு வயது முதலே அப்பாவின் படங்களை பார்த்து சினிமாவில் ஆர்வம் வந்து ஹீரோயினாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 5.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்கள் தான் என்னவெல்லாம் செய்தேன் என்பது குறித்த புகைப்படத் தொகுப்பை கல்யாணப் பிரியதர்ஷன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநரின் மகள்: இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணப் பிரியதர்ஷன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹலோ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். டோலிவுட்டை தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்தார். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான வாரனே அவசியமுண்டு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான புத்தம் புது காலை ஆந்தாலஜியிலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்திலும் நடித்துள்ளார்.

க்யூட்டான சிரிப்பு: தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தொடர்ந்து நடத்தி வரும் கல்யாணி பிரியதர்ஷன் மோகன்லால் நடித்த அரபிக்கடலின் சிங்கம் படத்தில் நடித்தார். அதன் பின்னர் மோகன்லால் மகன் நடித்த ஹிருதயம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த ஆண்டு மீண்டும் மோகன்லால் மகனுடன் ஜோடி போட்டு வருஷங்களுக்கு சேஷம் படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அவரது க்யூட்டான சிரிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அடிமைகளாக மாறியுள்ளனர்.

ஜெயம் ரவி ஜோடி: அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி எனும் பிரமாணம் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி மற்றும் வாமிகா கபி என 3 ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். 31 வயதாகும் கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் ஓடும் குதிரை எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் நடித்து முடித்து விட்டதாகவும் அடுத்ததாக புதிதாக ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும் விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்றும் தற்போது புகைப்பட தொகுப்புடன் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
ஆண் நண்பர்களுடன்: கல்யாணி பிரியதர்ஷன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், எந்தளவுக்கு நொறுக்குத்தீனி திண்கிறேன் என்பது குறித்த போட்டோ என ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ள நிலையில், ஆண் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கண்கலங்கிய கல்யாணி பிரியதர்ஷன்: மேலும், மற்றொரு புகைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கலங்கி அழுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், அது படத்தின் டப்பிங்கிற்கான புகைப்படம் என்றும் யாரும் பயப்பட வேண்டாம் எனக்கு எதுவும் ஆகவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்து பயப்படலம்மா நீச்சல் குள போட்டோ தான் பயமுறுத்துது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











