Kalyani Priyadarshan: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு கைகள் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்.. செம்ம எமோஷனல் வீடியோ

கொச்சி: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகைகளில் ஒருவர். தெளிவான மற்றும் நேர்த்தியான கதை தேர்வு இவரை தொடர்ந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது எனலாம். இவர் தான் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் செய்த செயல் பலர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கல்யாணி பிரியதர்ஷன் மலையாள சினிமாவில் இருந்து தனது நடிப்பு கெரியரை தொடங்கிய இவருக்கு தற்போது தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். செம்ம கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் தொடங்கி, மிகவும் அழுத்தம் திருத்தமான காட்சிகளில் சிறப்பாக நடிப்பது என அவரது பாணி பாராட்டுக்குரியது.

Kalyani Priyadarshan Wins Hearts by Helping a Differently-Abled Girl Receive Award - Emotional Video Goes Viral

இப்படி இருக்கையில் கேரளம் மாநில அரசின் கேரள மாநில இளைஞர் ஆணையத்தின் சார்பில் விருது வழங்கப்பட்டது. அதில் அவர் பேசுகையில், " கேரளம் மாநிலத்தில் இருந்து நான் எனது முதல் விருதைப் பெறுகிறேன். அவரவர் துறைகளில் சாதித்து மற்ற இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக இருக்கும் பல திறமைசாலிகளுக்கு மத்தியில் நான் நிற்பதை நினைத்து பெருமைப் படுகிறேன். இந்த விருது எனக்கு கொடுத்துள்ள பொருப்புக்கு தகுந்தவளாக வரும் காலங்களிலும் நடந்து கொள்வேன்.

பெருமை: நமது மாநிலமும் நமது இளைஞர்களும் பெருமை கொள்ளும் வகையில் நடந்து கொள்வேன். நமது மாநிலத்தை ஒரு கர்வத்துடன் எங்கும் பிரதிநிதித்துவப்படுத்துவேன்" என்றும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன் விருது வாங்க மேடைக்குச் செல்லும் போது அவருக்கு முன்னதாக ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது.

Kalyani Priyadarshan Wins Hearts by Helping a Differently-Abled Girl Receive Award - Emotional Video Goes Viral

கை கொடுத்த கல்யாணி பிரியதர்ஷினி: அந்த சிறுமி கைகள் மாற்றுத்திறனாளி, அவருக்கு இரண்டு கைகளுமே இல்லை. விருது வழங்குபவர் விருதை அந்த சிறுமிக்கு அருகில் கொண்டு வைத்து, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க, சிறுமிக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷனோ, உடனே தனது இரண்டு கைகளையும் நீட்டி, சிறுமியின் விருதுகளை வாங்கினார். சிறுமி விருது பெறுகிறார் என்ற போது அங்கிருந்த பலரும் கைகளைத் தட்டி ஆரவாரப்படுத்தினர். அதே நேரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிறுமியின் சார்பாக விருதை வாங்க கைகளை நீட்டிய போது அந்த கைதட்டலும் உற்சாகமும் மேலும் அதிகரித்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் கல்யாணி பிரியதர்ஷனை பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X