தீபாவளி மோடில் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

சென்னை: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இப்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லூசிஃபர் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ப்ரோ டாடி மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு உடன் இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள சூழலில் இப்பொழுது தீபாவளி மோடில் கல்யாணி பிரியதர்ஷன் ஜொலிக்கும் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெலுங்கில் குவியும் வாய்ப்புகள்

தெலுங்கில் குவியும் வாய்ப்புகள்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ஹீரோ மற்றும் புத்தம் புது காலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிகர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் அகில் ஹீரோவாக நடித்த ஹலோ படத்தில் நடித்ததன் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகப் படுத்தப் பட்டார். முதல் படமே தெலுங்கு என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் தெலுங்கில் இவருக்கு வரத்தொடங்கின.

சிம்புவுக்கு ஜோடியாக

சிம்புவுக்கு ஜோடியாக

தமிழுக்கு ஹீரோ இவருக்கு அறிமுகப் படமாக அமைந்தது. இதில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். ஹீரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் கல்யாணி பிரியதர்ஷினுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது. தமிழ்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வைத்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் இப்பொழுது சிம்புவுடன் இணைந்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

 மாநாடு ரிலீஸ்

மாநாடு ரிலீஸ்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகிவரும் மாநாடு திரைப்படம் சென்ற ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது கொரோனா காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தாமதமாகியது. இப்பொழுது முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு வரும் நவம்பர் 25 ஆம் தேதி மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார்.

 தீபாவளி மோடில் ஜொலிக்கும்

தீபாவளி மோடில் ஜொலிக்கும்

மலையாளத்தில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இப்பொழுது லூசிஃபர் கூட்டணி மீண்டும் இணைந்து ப்ரோ டாடி திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதன்முறையாக சிம்புவுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இப்போதே தீபாவளி மோடுக்கு கல்யாணி மாறியுள்ளார். தீபாவளி இன்னும் சில தினங்களில் வரை இருக்கும் சூழலில் தீபாவளி மோடில் பட்டு சேலையில் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷனை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X