அப்பா கமல் பற்றி ரஜினி இதைத்தான் சொல்வார்.. நிறைய வித்தியாசங்கள்.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தின் மீதும், கூலி படத்தின் மீதும் அவரது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதிஹாச ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார்.

ரஜினியின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. கதை ரீதியாக படம் அருமையாக இருந்தாலும் இது முழுக்க ரஜினி படமாகவும் இல்லாமல்; இயக்குநர் ஞானவேலின் படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே இருந்தது. இதன் காரணமாகத்தான் எதிர்பார்த்த வெற்றி அந்தப் படத்துக்கு கிடைக்கவில்லை. வசூல் ரீதியாகவும் வேட்டையன் பயங்கரமாக டல் அடித்துவிட்டது என்பதுதான் உண்மை.

கூலி ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி மெகா ஹிட்டை கொடுத்தார் இயக்குநர். இதன் காரணமாக ரஜினிக்கும் அதே மாதிரியான ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஹை பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படமானது இந்த வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது.

Kamal Daughter Shruthi Haasan Open Talks about Rajinikanth

லோகேஷுக்கு முக்கியமான படம்: இப்படம் லோகேஷ் கனகராஜுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை அவர் இயக்கியிருக்கும் படங்களில் லியோ தவிர்த்து மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. ஆனால் லியோவோ சுமாரான வரவேற்பைதான் பெற்றது. சுமார் வரவேற்பு என்பதைத் தாண்டி மிகப்பெரிய ட்ரோலையும் சந்தித்தது. இதன் காரணமாக கூலி படத்தை ஹிட்டாக கொடுத்து லியோவில் சந்தித்த விமர்சனத்துக்கும், ட்ரோலுக்கும் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார் லோகி.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர் கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக அமீர் கான் இந்தப் படத்தின் மூலம்தான் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதேபோல் சத்யராஜும் பல வருடங்கள் கழித்தும்; கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முதன்முறையாகவும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசன் பேட்டி: இந்நிலையில் கூலி படத்தில் நடித்தது தொடர்பாகவும், ரஜினிகாந்த்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார் ஸ்ருதி. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "கூலி படத்தில் நடித்ததன் மூலம் அவருடன் முதன்முறையாக நடித்திருக்கிறேன். அதை நினைக்கையில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பாவுக்கும் அவருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

எளிமை, ஷார்ப்: அவரை பற்றி தெரிந்துகொள்ளும் பாக்கியம் இந்தப் படத்தால் கிடைத்தது. அவர் நிறைய நல்ல விஷயங்கள் சேர்ந்த மனிதர். அவ்வளவு எளிமையாக இருப்பார். அதேசமயம் பயங்கர ஷார்ப்பாக இருப்பார். முக்கியமாக அனைவரிடமுமே கனிவாகத்தான் நடந்துகொள்வார். என்னுடைய அப்பா பற்றி பல விஷயங்களை கூலி செட்டில் அவர் பேசியிருக்கிறார். முக்கியமாக எனது அப்பா செய்த உதவிகள் குறித்தும், அப்பாவை குறித்தும் உயர்வாகத்தான் பேசுவார்"என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X