Silk Smitha - சில்க் ஸ்மிதா அதில் கில்லாடி.. அந்த அனுபவம் இதுதான்.. மனம் திறந்து பேசிய கமல் ஹாசன்

சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) நடிகை சில்க்குடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகை சில்க் ஸ்மிதா. அவர் உயிரிழந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆனாலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் இருந்துகொண்டே இருக்கிறது. அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில்கூட அவர் போன்றே உருவம் கொண்ட ஒரு பெண்ணை நடிக்க வைத்து படக்குழு ரசிகர்களிடம் பெரும் ரெஸ்பான்ஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை: சில்க் ஸ்மிதா வெறும் கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டாலும் அவருக்குள் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகை இருந்தார் என்பது அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது. எம்ஜிஆர்கூட, சில்க் ஸ்மிதா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது நினைவுகூரத்தக்கது.

Kamal Haasan Shares His Experience With Silk Smitha

பயோபிக்: ஏற்கனவே ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டது. அது ரிலீஸான சமயத்தில் பெரிய சென்சேஷ்னல் ஆனது. வித்யாவுக்கும்கூட சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அடுத்ததாக தமிழிலும் சில்க் அன் டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் படம் உருவாகிறது. இதில் சில்க்காக சந்திரிகா ரவி நடிக்கிறார்.

நேற்று சில்க்கின் பிறந்தநாளையொட்டி அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். ஜெயராம் என்பவர் படத்தை இயக்குகிறார். 2024ஆம் அண்டு படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சில்க்குடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அனுபவம்: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மூன்றாம் பிறை படத்தில் முதலில் சில்க்கோடு கவர்ச்சியான நடனம் ஆடும் பாடல் முதலில் படத்தில் இல்லை. ஆனால் படத்தின் பிஸ்னெஸுக்காக அது சேர்க்கப்பட்டது. நானும் அதில் இருக்க வேண்டியதாக இருந்தது. மிக மிக குறைந்த செலவில் அந்தப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குநர் பாலு மகேந்திரா.

நடனம் தெரியாது: அந்தப் பாடலுக்கு பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர்தான் நடன அசைவுகளை அமைத்திருந்தார். சில்க்குக்கு என்ன வருமோ அதற்கேற்றபடி நடன அசைவுகளை கொடுத்தார். சில்க் ஸ்மிதாவுக்கு உண்மையில் நடனம் ஆட தெரியாது. அதேசமயம் மற்றவர்களை இமிடேட் செய்வதில் சில்க் கில்லாடி. அதேபோல் ஃபேஷனுக்கேற்றபடி உடைகள் அணிவது அவருக்கு பிடிக்கும். அதை நான் அவரிடமும் சொல்லி பாராட்டியிருக்கிறேன். நிறைய கஷ்டங்களை கடந்து வந்தவர் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X