கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என்ன தெரியுமா?.. கமல் மகளுக்கு கெத்துதான்
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. முதன்முறையாக அவர் ரஜினி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூலி படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் அடிப்படையில் ஒரு பாடகர். ஆல்பம் பாடல்கள் செய்துகொண்டிருந்த அவர்; தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய வெற்றியை அந்தப் படம் பெறாவிட்டாலும் ஸ்ருதியின் நடிப்புக்கு வரவேற்பு பலமாகவே கிடைத்தது. தொடர்ந்து தனுஷ், விஷால் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
மற்ற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவருகிறார் அவர். தந்தை போலவே மற்ற மொழிகளிலும் நடித்து தனக்கென தனி அடையாளத்தை வாங்கியிருக்கும் அவர் சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார். அவர் சிலரை காதலித்து அது செட் ஆகாததால் அந்த உறவுகளிலிருந்து அதிரடியாக வெளியே வந்தவர். அதுமட்டுமின்றி திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூலியில் ஸ்ருதி: இப்படிப்பட்ட நிலைமையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி. தனது தந்தைக்கு போட்டி நடிகராக கருதப்படும் ரஜினிகாந்த் இப்படத்தின் ஹீரோ என்பதால் இப்படத்தில் ஸ்ருதியின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தில் தான் ஏற்றிருக்கும் ரோல் குறித்த சீக்ரெட்டை முதன்முறையாக உடைத்திருக்கிறார் ஸ்ருதி.
என்ன கேரக்டர்: அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நானும், லோகேஷ் கனகராஜும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்தோம். அப்போதுதான் அவர் என்னிடம் கூலி படத்தின் கதையை கூறினார். இந்தப் படத்தில் நான் சத்யராஜுக்கு மகளாக நடித்திருக்கிறேன். படத்தில் எனது கேரக்டர் ரொம்பவே வலிமையானது" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கூலி கொண்டாட்டம்: முன்னதாக கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் மூன்று சிங்கிள்களில் ஒரு பாடல் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இருப்பினும் படத்தின் மீது ஏகப்பட்ட ஹைப்புகள் இருக்கின்றன. முக்கியமாக இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என ரசிகர்களும், திரைத்துறையினரும் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











