»   »  ராதிகா படத்தில் கமலினி

ராதிகா படத்தில் கமலினி

Subscribe to Oneindia Tamil

கமலுடன் விளையாடி, ரசிகர்களை வேட்டையாட வந்த வங்கத்து ரசகுல்லா கமலினி முகர்ஜி அடுத்து ஒரு புதியதமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார்.

கமலினிக்கு வேட்டையாடு விளையாடு முதல் படமாக இருந்தாலும் அதற்கு முன்பே ஒரு தமிழ்ப் படத்தில்நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு தவறிப் போய் விட்டதாம்.

இப்போது வேட்டையாடு விளையாடு அவருக்கு செமத்தியான பிரேக்கை தமிழில் கொடுத்துள்ளது.வேட்டையாடு விளையாடுவை முடித்து விட்டு நேராக தெலுங்குக்குப் போன கமலினி அங்கு கோதாவரி என்றபடத்தில் நடித்தார்.

இப்போது அதை முடித்து விட்ட கமலினிக்கு தொடர்ந்து தெலுங்கில் நடிக்க விருப்பம் இல்லையாம். தமிழ்தான்அவருடைய சாய்ஸாக இருக்கிறதாம்.

தற்போது கமலினி அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார். ராதிகாவின் ரேடான் நிறுவனத்தின்தயாரிப்பில் ப்ரியா இயக்கத்தில் கமலினி நடிக்க புதிய படம் உருவாகிறது. இதில் மலையாளத்து பிருத்விராஜ்தான்ஹீரோ.

வேட்டையாடு விளையாடு படத்தைப் போல இந்தப் புதிய படத்திலும் கமலினிக்கு பவர்ஃபுல் ரோல்தானாம்.தொடர்ந்து தமிழில் அதிக படங்களில் நடித்து அசத்தப் போகிறதாம் இந்த கொல்கத்தா ஜிலீர் டிராம்!

அவ்வப்போது விளம்பரங்களிலும் தலை காட்டுகிறீர்களே, இரட்டை சவாரியைத் தொடர்வீர்களா என்றுகேட்டால், விளம்பரம்தான் என்னை முதலில் அடையாளம் காட்டியது. ஸோ, விளம்பரத்திலும் தொடர்ந்துநடிப்பேன் என்று தாமரைப் பூவாக வாய் மலர்கிறார் கமலினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil