»   »  18 கேட்கும் கமலினி முகர்ஜி

18 கேட்கும் கமலினி முகர்ஜி

Subscribe to Oneindia Tamil

வேட்டையாடு விளையாடு சூப்பராக ஓடியதைத் தொடர்ந்து தனது சம்பளத்தை கடுமையாக ஏற்றி விட்டாராம்கமலினி.

வங்கத்து தங்க தேவதை கமலினி முகர்ஜி தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படியே தமிழுக்கும்தாவியவர். முதல் படத்திலேயே சூப்பர் ஆக்டர் கமல்ஹாசனுடன் நடித்ததால் பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளானவர்.

அதற்கேற்ப வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுடன் இணைந்து அசத்தலாக நடித்திருந்த கமலினியின்நடிப்பு இனிதாக இருந்ததாக ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

இதனால் கமலினிக்கும் தமிழில் மார்க்கெட் கம்பளத்தை விரித்து வைத்து கால்ஷீட்டுக்கு அலையஆரம்பித்துள்ளனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.

கமலினி தெலுங்கில் நடித்த ஸ்டைல் படம் இப்போது ஒரு தாயின் லட்சியம் என்ற பெயரில் தமிழுக்கும் டப்ஆகியுள்ளது. இதில் கமலினியும் ஒரு ஹீரோயின். இந்தப் படமும் தனக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கித் தரும்என்ற நம்பிக்கையில் உள்ளார் கமலினி.

இப்படத்தில் கிளாமர் வேட்டையில் இறங்கியுள்ளார் கமலினி. எனவே ஹோம்லி பிளஸ் கிளாமர் நாயகியாக தான்தமிழில் அறியப்படுவோம் என்று அவர் நம்புகிறார்.

வேட்டையாடு சூப்பர் ஹிட் ஆனதாலும், தனக்கு டிமாண்ட் ஏற்பட்டிருப்பதாலும், இதை சாக்காக வைத்து தனதுரேட்டை ஏற்றி விட்டாராம் கமலினி. தமிழில் நடிக்க அவர் இப்போது கேட்கும் சம்பளம் 18 லட்சமாம். இதுபோகதங்கும் வசதி, சாப்பாடு உள்ளிட்ட இதர வசதிகள் தனியாம்.

தமிழில் கமலினி நடித்த முதல் படமாக வேட்டையாடு விளையாடு இருந்தாலும் அதற்கு முன்பே விளையாட வாஎன்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவர்தான் கமலினி. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால்எடுக்கப்படவில்லை. இதனால் அப்போது நடிப்பு வாய்ப்பை இழந்தார் கமலினி.

ஆனாலும் தொடர்ந்து செய்து வந்த முயற்சிகளின் விளைவாக கமலுடன் ஜோடி போடும் அட்டகாச வாய்ப்புகிடைத்து இப்போது மார்க்கெட்டைப் பிடித்து விட்டார்.

திருட்டுப் பயலே ஜீவனுக்கு ஜோடியாக மச்சக்காரன் என்ற படத்தில் கமலினியை நாயகியாக்க பேச்சு நடந்துவருகிறதாம். அனேகமாக கமலினி இறுதியாகி விடுவாராம்.

ஹோம்லியாக மட்டுமல்லாமல் விதம் விதமான பாத்திரங்களில் நடித்து அசத்துவதே தனது லட்சியம் என்கிறார்இந்த கொல்கத்தா ரசகுல்லா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil