»   »  சிம்புவுடன் கை கோர்க்கும் கமலினி

சிம்புவுடன் கை கோர்க்கும் கமலினி

Subscribe to Oneindia Tamil

கமலுடன் வேட்டையாடி, விளையாடிய கலக்கல் ரசகுல்லா கமலினி முகர்ஜி அடுத்துசிம்புவுடன் சிலுக்கப் போகிறார்.

நயன்ஸ் கொடுத்த ஷாக்கிலிருந்து மீண்டு அமெரிக்காவிலிருந்து ரிடர்ன் ஆகியுள்ளசிம்பு அடுத்து திமிரு பட இயக்குநர் தருண் கோபியின் இயக்கத்தில் மோசமானவன்என்ற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தருண் கோபி படத்தில் சிம்பு இப்போது நடிக்கவில்லையாம். மாறாக,கேமராமேன் சரவணன் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில்தான் நடிக்கப்போகிறாராம். இந்த சரவணன் வேறு யாருமல்ல, நடிகை சங்கீதாவின் (அதாங்க,பார்த்திபனுடன் கொஞ்ச காலத்திற்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டாரே அவரேதான்!)கணவர்தான்.

பிசியான சரவணன் இயக்கப் போகும் முதல் படம் இதுதான். இப்படத்தை தயாரிக்கப்போவது, அஜீத்தின் நண்பரும், வரலாறு படத்தின் தயாரிப்பாளருமான நிக் ஆர்ட்ஸ்சக்கரவர்த்தி.

இப்படத்தின் கதை பிடித்துப் போய் விட்டதால் சரவணன் படத்தில் நடிக்க கால்ஷீட்கொடுத்து விட்டாராம் சிம்பு. அவருக்கு இதில் இரட்டை குதிரைகளாம் அதாவதுஜோடிகளாம்.

ஒருவர் கம கம கமலினி. இன்னொரு ஜோடி சிலிர்க்க வைக்கும் ஷ்ரியா. சிம்பவுன்டிரண்டுகேற்ப இப்படத்தை ஆர்ப்பாட்டமாக உருவாக்கப் போகிறாராம் சரவணன்.

இப்படத்தின் மூலம் தனது முழுத் திறமைகளையும் கொட்டிக் கவிழ்க்கப் போகிறாராம்சிம்பு. நயன்ஸ் பாதிப்பால் சிம்பு வீழவில்லை என்பதை இப்படம் நிரூபிக்குமாம்.

வேட்டையாடு விளையாடு சூப்பர் ஹிட் ஆகி விட்டதால் கமலினி தனது சம்பளத்தை18 லட்சமாக ஏத்தி விட்டார். அந்த சம்பள்ததைக் கொடுத்துத்தான் இப்படத்தில் புக்பண்ணியுள்ளனராம்.

இன்னொரு நாயகியான ஷ்ரியா, சிவாஜி >லீஸுக்குப் பிறகு தனது சம்பளத்தை த்ரிஷாரேஞ்சுக்கு ஹைக் செய்ய காத்துள்ளாராம்.

திமிரு இயக்குனர் படத்தில் நடிக்காவிட்டால் என்ன, சரவணன் படத்தில் குமுறிவிட்டால் போச்சு!

Read more about: kamalini to pair with simbu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil