»   »  எஸ்.ஜே.சூர்யா உடன் ஜோடி போடும் கமலினி முகர்ஜி

எஸ்.ஜே.சூர்யா உடன் ஜோடி போடும் கமலினி முகர்ஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலினி முகர்ஜியை நினைவு இருக்கிறாதா? தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. பார்த்த முதல்நாளில் பாட்டில் கமலுடன் பைக்கில் போவாரே அவரேதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய படமான 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக கமாலினி முகர்ஜி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் மனைவியாக வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தார் கமலினி முகர்ஜி. அவர் நடித்தது ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் ரசிகர்களின் மனதில் நின்றவர் கமலின். அந்த படத்திற்குப் பிறகு 'பிரிவோம் சந்திப்போம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு தட்டிப்போகவே அதில் சினேகா நடித்தார். குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட கமலினிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.

ஜிகர்தண்டா இயக்குநர்

ஜிகர்தண்டா இயக்குநர்

'ஜிகர்தண்டா' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மூன்றாவது படம் இறைவி. இப்படத்தை சி.வி.குமார் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். 'இறுதிச் சுற்று' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சிவா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதி - அஞ்சலி

விஜய் சேதுபதி - அஞ்சலி

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், காளி வெங்கட், அஞ்சலி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா – கமலினி முகர்ஜி

எஸ்.ஜே.சூர்யா – கமலினி முகர்ஜி

இறைவி படத்தில் அஞ்சலியைத் தவிர மேலும் 2 நாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேக் கிடைக்குமா?

பிரேக் கிடைக்குமா?

கமாலினி முகர்ஜி தற்போது 'இறைவி' படப்பிடிப்பில் கலந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யா உடன் நடித்து வருகிறார். இந்தப்படம் மூலம் தனக்கு பிரேக் கிடைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறாராம் கமலினி முகர்ஜி.

English summary
kamalini mukherjee was introduced by Director Goutham Menon in his film called “Vetaiyadu Vilayadu”. She had played protruding role along with Ualaga Nayagan Kamal Hassan.
Please Wait while comments are loading...