விஜய் அரசியல் என்ட்ரி.. நான் ரெடியாக இருக்கிறேன்.. அப்பா சம்மதிக்க வேண்டுமே?.. கமல் மகள் ஓபன் டாக்

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கிவரும் அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர்கள் பிரேக் அப் செய்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று சென்னை வந்தார் அவர்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

தனுஷின் முன்னாள் மனைவி இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

Kamal s daughter Shruthi Haasan says she is ready to act with him

கடைசியாக நடித்த படம்: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும் லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார்.

ஹாலிவுட் வாய்ப்பு: இதனையடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் அந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். இப்போது அவர் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அது மட்டுமின்றி மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் ட்ரெய்ன் படத்திலும் ஹீரோயின் ஸ்ருதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து தமிழில் தொடர்ந்து கமிட்டாகிவருவதால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க ஸ்ருதிஹாசனின் தந்தையான கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார் ஸ்ருதி. அப்போது விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள். கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அப்பாவுடன் சேர்ந்து நடிக்க நான் தயாராகத்தான் இருக்கிறேன். அதற்கு அவர் சம்மதிக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X