மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ’காமசூத்ரா’ நடிகை.. ஆபா பாலை பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்!
சென்னை: சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான வீரர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆபா பால். காமசூத்ரா 3டி, மஸ்திரம் உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ள ஆபா பால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கவர்ச்சி நடிகையாகவும் ஆபாச நடிகையாகவும் இந்தி திரையுலகத்தில் வலம் வருபவர் தமிழில் 'டேஸ்ட்' என்னும் படத்தில் நடித்துள்ளார். 36 வயதான இவர் கில்மா காட்சிகளில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை இந்தியா முழுவதும் ஈர்த்துள்ளார்.

ஆபாச படங்கள் நடித்து வந்தாலும் ஆன்மீகத்தில் அளவுகடந்த ஆர்வம் மற்றும் பக்தி இவருக்கு உள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு கோயில்களுக்கும் நாடு முழுவதும் சென்று வருகிறார்.
காமசூத்ரா நடிகை: 2005 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் நுழைந்த ஆபா பால் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் டெல்லி அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். உடனடியாக அவருக்கு சல்மான்கான் நடிப்பில் வெளியான 'வீர்' என்னும் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவர் நடித்த காட்சி கடைசியாக டெலிட் செய்யப்பட்டுவிட்டது. அதன் காரணமாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்திருக்க வேண்டியவர், ஆபாச படங்கள் பக்கம் செல்லும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார். 2013 ஆம் ஆண்டு உருவான காமசூத்ரா 3டி படத்தில் நடித்த இவர், பல உல்லு வெப்சீரிஸ்களில் கவர்ச்சி கன்னியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மஸ்திரம் வெப்சீரிஸ்: கண்டி பாத், மஸ்திரம், ட்ரிபிள் எக்ஸ், லோலிட்டா பிஜி ஹவுஸ், நாம்கீன் மற்றும் ஹனிமூன் சூட் ரூம் நம்பர் 911 உள்ளிட்ட பல வெப் சீரிஸ் களில் ஆபா பால் படு ஆபாசமாக நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடைகளை அணிந்தபடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எக்கச்சக்க லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன. சுமார் 1.5 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: மகா சிவராத்திரி முன்னிட்டு நடிகைகள் பலரும் கோயில் கோயிலாக சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடிகை அமலாபால் சென்றுள்ள புகைப்படங்களை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோபுரத்துடன் செல்ஃபி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே நின்று கொண்டு கோபுரத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார் ஆபா பால். அவரது அந்த புகைப்படத்தை பார்த்த மதுரையை சேர்ந்த ரசிகர்கள் பலரும், எங்கே இருக்கீங்க என்ன சொல்லுங்க உடனே கோயிலுக்கு கிளம்பி வருகிறோம் என கமெண்ட்களை குவித்து வருகின்றனர். ஹோம்லி லுக்கில் ரொம்பவே அழகா இருக்கீங்க மேடம் என்றும் 'டேஸ்ட்' படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஒரு படம் பண்ணுங்க என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











