»   »  மச்சக்கார காம்னா!

மச்சக்கார காம்னா!

Subscribe to Oneindia Tamil

இதயத் திருடன் படத்தோடு காணாமல் போன காம்னா, மறுபடியும் தமிழில் தலை காட்டுகிறார். ஜீவனுக்குஜோடியாக மச்சக்காரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம் ஜேட்மலானியின் பேத்திதான் காம்னா. படு அழகான காம்னா, இதயத்திருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், முகம் நம்ம ஊர் இயல்புக்குஒத்துவராததாக இருந்ததால் காம்னாவுக்குப் புதுப் படங்கள் கிடைக்காமல், அவரது மார்க்கெட் படு காம் ஆகஇருந்தது.

இதனால் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் காம்னா. அவையும் கூட ஒரு கட்டத்தில் நின்று போய்விட்டது. கிளாமர் தான் அவரது பலம் என்பதால் ஈசியாக தெலுங்கில் புகுந்து விளையாடிவிட்டு ஓய்ந்தார்.

இந்த நிலையில் வறண்டு போயிருந்த காம்னாவின் மார்க்கெட்டில் இப்போது லேசான சாரல் மழை பெய்யஆரம்பித்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளராக இருந்து, கள்வனின் காதலி மூலம் இயக்குநரான தமிழ்வாணன் இயக்கும்மச்சக்காரன் படத்தில் நடிக்க காம்னா புக் ஆகியுள்ளார். இதில்அவருக்கு ஜோடி போடுபவர் காக்க காக்கவில்லன் ஜீவன்.

எல்லாம் கிடைத்த பெண்ணும், வாழ்க்கையில் ஒன்றுமே கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கும் ஆணும் சேர்ந்துவாழ்க்கையைத் தொடங்குகிறார்களாம். இந்த முரண்பட்ட இரு பாத்திரங்களின் வாழ்க்கைதான் மச்சக்காரன்கதையாம்.

படத்தில் லொள்ளு சபா சந்தானம், ரமேஷ் கண்ணா, சிதாரா, சுலக்ஷனா என பலரும் உள்ளனராம். யுவன் சங்கர்ராஜா இசையைமக்கிறார்.

21ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி வேகமாக முடிக்கவுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் டாக்கிபோர்ஷனை முடித்து விட்டு, வெளிநாடுகளுக்குப் போய் பாடல் காட்சிகளை படம் பிடிக்கப் போகிறார்களாம்.

படத்தில் குத்துப் பாட்டுக்கும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். ஆமாமா, அதுதான் ரொம்ப முக்கியம்!...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil