என் தந்தை சொல்வதெல்லாம் பொய், நம்ப வேண்டாம் - மீடியாவுக்கு கனகா வேண்டுகோள்

By Shankar

சென்னை: என் தந்தை என்னைப்பற்றி வேண்டுமென்றே தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார். அவர் கூறும் எதையும் மீடியா உலகினர் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை கனகா.

கனகா இறந்ததாக சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானதும், அதைத் தொடர்ந்து அவரே நேரில் வந்து விளக்கம் அளித்ததும் நினைவிருக்கலாம்.

இந்த செய்தியைப் பரப்பியதே தன் தந்தை தேவதாஸ்தான் என்று கூறி, அவர் வீட்டுக்குப் போய் சண்டையெல்லாம் போட்டுள்ளார் கனகா.

தந்தை புகார்

தந்தை புகார்

இந்த நிலையில் கனகாவின் தந்தை தேவதாஸ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, ‘கனகா என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேட்டி கொடுத்து வருகிறார். அவர் இறந்து போனதாக நான் வதந்தி பரப்பினேன் என்கிறார். அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறேன் என்கிறார். எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்," என்று புகார் கூறினார்.

கனகா புகார்

கனகா புகார்

இதையடுத்து தந்தை மீது கனகா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘என் அப்பா என்னிடம் பாசமாக இருந்ததே இல்லை. எனக்கும் அவருக்கும் பாசம் வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை. நான் போதைக்கு அடிமையாகி இருப்பதாக என்னைப் பற்றி இப்போதும் அவர் வதந்தி பரப்பி வருகிறார். அவரை நான் மதிப்பது கிடையாது. அதனால் என்னை பழிவாங்க துடிக்கிறார்," என்றார்.

தொலைக்காட்சி பேட்டிகள்...

தொலைக்காட்சி பேட்டிகள்...

கனகா பற்றி திடீரென வினோதமான பல செய்திகள் வலம்வர ஆரம்பித்துள்ளதால், அவரைச் சந்திக்க மீடியா உலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். இது கனகாவின் சினிமா வாழ்க்கையை உயிர்ப்பிக்க உதவும் என திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

கனகாவை மீண்டும் சினிமாவில் நடிக்க வைக்கவும் சிலர் முயன்று வருகின்றனர். நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அவரைத் தொடர்பு கொண்டு உதவக் காத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அக்கா அல்லது அண்ணி வேடங்களில் நடிக்க கனகா சம்மதித்தால் வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் நடிகர் சங்கம் கனகாவிடம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X