கரகாட்டக்காரன் கனகாவா இவங்க?.. இப்படி மாறிட்டாங்களே.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்

சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் எதிர்பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் கனகா குறித்து ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் அவரது லேட்டஸ்ட் ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

kanaka tamil cinema kollywood

பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

தனிமைப்படுத்திக்கொண்ட கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.

கனகாவின் ஃபோட்டோ: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்துக்குள் நடிகை குட்டி பத்மினி வந்தார். கனகாவின் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அவரை எப்படியோ சந்தித்துவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு சென்று நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு கலைந்தனர். அப்போது கனகாவுக்கு குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

நோ பேட்டி: அந்தப் புகைப்படத்தை பார்த்தபோது நம்ம கனகாவா இவங்க என ரசிகர்கள் ஆச்சரியம்தான் பட்டனர். மேலும் அந்த சந்திப்புக்கு பிறகு பேட்டி அளித்த குட்டி பத்மினி, 'கனகாவுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்கிறேன். அவர் விரைவில் வெளியே வந்து பேட்டி அளிப்பதாக என்னிடம் தெரிவித்திருப்பதாக கூறியிருந்தார் பத்மினி. இதனால் கனகாவின் பேட்டிக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு பிறகு கனகா என்ன ஆனார் என்று தெரியவில்லை.

புதிய ஃபோட்டோ: இந்நிலையில் கனகாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஷாப்பிங் மால் ஒன்றுக்கு அவர் சென்றிருந்தபோது அவருடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட ஃபோட்டோதான் வெளியாகியிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அட கனகாவா இவங்க இப்படி மாறிட்டாங்களே என்று அதிர்ச்சி கலந்து ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X