கங்காரு பிரியங்கா நடிக்கும் ரீங்காரம்.. ஒரு நாளில் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்கள்!

By Shankar

எங்கிருந்தோ வந்து விழுகிற ஒரு கல், குளம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துவதைப் போல, வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பந்த மில்லாதவர்களால் சந்திக்கும் அதிர்வலைகளைச் சொல்கிற படம்தான் 'ரீங்காரம்'.

வண்டு பறக்கும் போது பரவும் ரீங்காரம் வாழ்க்கை நடக்கும் போதும் ஏற்படும் என்பதை சொல்கிறது இப்படம்.

Kangaaru Priyanka's new movie Reengaram

ஜே ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகும் இப்படத்தை சிவகார்த்திக் இயக்குகிறார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், அவரது சீடர்கள் சி.ஜே. பாஸ்கர், சமுத்திரக்கனி, 'அரசு' சுரேஷ் போன்ற இயக்குநர்களிடமும் உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்து சிவகார்த்திக் இயக்கும் முதல் படம் இந்த 'ரீங்காரம்'.

ஒருநாள் காலை முதல் மாலைவரை நான்கு பேர் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புதான் இந்த ரீங்காரம்.

கைலாஷாக பாலா நடிக்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் தினேஷிடம் ஒளிப்பதிவு உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர். இயக்குநருக்கு நண்பர். பொருத்தமாக இருந்ததால் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.

கவிதாவாக 'கங்காரு' பிரியங்கா நடிக்கிறார். முருகேசனாக கலாபவன் மணி. வில்லனா காமெடியனா என்று யூகிக்க முடியாத பாத்திரத்தில் வந்து கல கலப்பு மணியாக திகிலூட்டுகிறார்.

ராணுவ வீரராக 'ஆடுகளம்' வ.ச.ஐ.ஜெயபாலன் நடிக்கிறார்.

கதை நிகழ்விடம் திருச்சியும் திருச்சியைச் சார்ந்த கிராமங்களும். இது தவிர சென்னையிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன் ஹாரிஸ். இவர் ஆர்தர் வில்சனின் உதவியாளர். இசை அலிமிர்சா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X