ஷுட்டிங் இல்ல.. இதையாவது செய்யலாமே.. தீயாய் வேலை செய்யும் பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!
சென்னை: கொரோனா வைரஸை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பிரபல நடிகை ஒருவர் உடல் எடையை குறைக்க தீயாய் வேலை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த நாடும் முடங்கியிருக்கிறது.

பிரபலங்கள் பலரும் இந்த ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்தும், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சில சினிமா நட்சத்திரங்கள், இந்த ஊரடங்கில் கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி ஊறுகாய் போடுவது, சமையல் செய்வது என பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை கங்கனா ரணாவத் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு இருக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'தலைவி' படத்தில் நடிக்கிறார் கங்கனா ரனாவத்.
இதில் ஜெயலலிதா தோற்றத்துக்கு மாறுவதற்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை 20 கிலோ வரை கூட்டி இருந்தார். தற்போது படத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் முடிந்து விட்டதால் உடல் எடையை குறைத்து பழைய ஒல்லியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்திருக்கிறார்.
இதனால் கொரோனாவுக்காக கிடைத்த ஓய்வில் பயிற்சியாளரை வைத்து கொண்டு உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக குனிந்து நிமிர்ந்து கடினமாக உடற்பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார் கங்கனா ரனாவத் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











