»   »  திரண திரண கங்கனா!

திரண திரண கங்கனா!

Subscribe to Oneindia Tamil

ரீமா சென் விலகிக் கொள்ள, இப்போது அவரது இடத்தில் கங்கனா ரனவத் புகுந்துள்ள்ளார்.

ஜெயம் ரவி நடிக்க, கேமராமேன் ஜீவா இயக்கத்தில் உருவாகும் படம் தாம் தூம். இப்படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியில் ஒருவராக நடிக்க ரீமாசென்னை புக் செய்திருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டார். என்னாச்சு என்று பார்த்தால், ரீமாவுக்கு படத்தில் ஒரு பாடல்தானாம்.ஆனால் எனக்கு ரெண்டு வேணும் என்று ரீமா கேட்க, அட போம்மா என்று ஜீவா சத்தாய்க்க, ரீமா கழன்று கொண்டு விட்டார்.

இப்போது ரீமாவுக்குப் பதில் கங்கனா ரனவத் எனும் இந்தி நடிகையை இறக்கிவிட்டுள்ளனர். கேங்ஸ்டர் என்ற படம் மூலம் இந்தியில் நுழைந்தமாடல் இவர். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிங்கப்பூரில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்

பின்னர் ஓ லம்ஹே என்ற படத்தில் நடித்துக் கலக்கினார். இப்போது மெட்ரோ உள்பட சில இந்திப் படங்களில் நடித்து வருகிறார். கங்கனாவின்சொந்த ஊர் இமாச்சலப் பிரதேசம். தமிழ் சினிமா குறித்து ரொம்ப ஆர்வமாக உள்ள இவர் கோலிவுட்டில் நிலைத்து நிற்க விரும்புகிறார்.

ரவியுடன் நடிக்கும் முதல் தமிழ் படமான தாம் தூமில் கங்கனா ஃபிளாஷ்பேக் காட்சியில் வருகிறாராம். அதாவது ரவியின் காதலியாக நடிக்கிறார்.

பார்க்க படு க்யூட்டாக, ஜில்லென்று இருக்கிறார் கங்கனா. நடிக்க வந்த பின்னர் தமிழ் ரசிகர்களை ரணப்படுத்துவது திண்ணம். அப்படி ஒருஅம்ஜக்காக இருக்கிறார்.

ரீமாவுக்கு வைத்தது போலில்லாமல் கங்கனாவுக்கு நடிக்க நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளாராம் ஜீவா. படத்தின் பெரும்பாலான பகுதிகள்ரஷியாவில்தான் நடப்பதாக உள்ளதாம். அதற்கு முன்பு படப்பிடிப்பை பொள்ளாச்சியில் தொடங்கி விட்டனர். மார்ச் 5ம் தேதி இங்குதானாம்.அப்புறம் ரஷ்யாவுக்குப் பறக்கிறார்கள்.

நல்லா பறங்க, கங்கனாவிடமிருந்து நடிப்பை நல்லா கறங்க!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil