For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவி.. ஜெ. வேடத்தில் நடிக்க கஷ்டப்படும் கங்கணா.. அட இது என்னப்பா தமிழுக்கு வந்த சோதனை?

    |
    Thalaivi Kangana Ranaut:தலைவிக்காக கங்கண செய்யும் காரியம்

    மும்பை: தலைவி படத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் கற்று வருவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

    மறைந்ந முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பல இயக்குனர்கள் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் முக்கியமான படம் தலைவி.

    இந்தி மற்றும் தமிழில் எடுக்கப்படும் தலைவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

    சர்ச்சை நடிகைக்கு ஆதரவு.. தங்களது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஷாக் தந்த நடிகைகளால் பரபரப்பு !

    தலைவி படப்பிடிப்பு

    தலைவி படப்பிடிப்பு

    தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. தலைவி என எழுதப்பட்ட கிளாப் போர்டு போட்டோவை மட்டுமே வெளியிட்டனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கங்கனா ரனாவத்

    கங்கனா ரனாவத்

    இந்நிலையில் மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கங்கனா ரனாவத், தலைவி படம் குறித்து பேசியுள்ளார். இந்த படத்திற்காக தான் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுவருவதாக அவர் கூறியுள்ளார்.

    தமிழ் கற்பது கஷ்டம்

    தமிழ் கற்பது கஷ்டம்

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "தமிழ் கற்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்படுவதால் நாம் நிச்சயம் அதற்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழை சுலபமாக பேசிவிட முடியாது என்பதால், நிறைய வசனங்களை மனப்பாடம் செய்து நடிக்கிறேன்.

    தமிழ் தெரிவது அவசியம்

    தமிழ் தெரிவது அவசியம்

    படத்தின் கதைப்படி எனக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனவே முழுமையாக தமிழ் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயின்று வருகிறேன். ஆங்கில மொழியைக்கூட அப்படி தான் கற்றுக்கொண்டேன்", என கங்கனா தெரிவித்துள்ளார்.

    கங்கனாவுக்கு பாராட்டு

    கங்கனாவுக்கு பாராட்டு

    தமிழ் மொழியை கற்பதை தவிர, தலைவி படத்திற்காக பரத நாட்டியமும் கற்றுக்கொண்டுள்ளார் கங்கனா. அதேபோல் பிராஸ்தடிக் மேக்கப்பிற்காகவும் கங்கனா நிறைய நேரம் செலவழித்துள்ளார். ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய அரசியல் தலைவர் மற்றும் நடிகையின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, கங்கனா மேற்கொண்டு வரும் முன்தயாரிப்புகளை பார்த்து தமிழ் மற்றும் இந்தி திரையுலகம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

    English summary
    Actress Kangana Ranaut, who will next be seen playing former Tamil Nadu chief minister, the late J. Jaylalithaa, in the forthcoming multilingual biopic "Thalaivi", admits finding it difficult to learn the Tamil language.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X