டெய்லி மினரல் வாட்டரில்தான் குளிக்கிறாராமே 'தாம் தூம்' நடிகை?
மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மினரல் வாட்டரில் குளிக்கிறாராம்.
ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். தேசிய விருது பெற்ற அவர் பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
அவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

குடியேற்றம்
கங்கனா புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டில் குடியேறியுள்ளார். அண்மையில் தான் அந்த குடியிருப்புக்கு குடியிருப்போருக்கான சான்று வழங்கப்பட்டது.

தண்ணீர்
கங்கனா குடியேறியுள்ள குடியிருப்புக்கு குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டும் இன்னும் மும்பை மாநகராட்சி இணைப்பை வழங்கவில்லையாம்.

மினரல் வாட்டர்
வீட்டில் தண்ணீர் இல்லாததால் கங்கனா மினரல் வாட்டர் வாங்கி குளிக்கிறார் என்று கூறப்படுகிறது. இணைப்பு கிடைக்கும் வரை இது தொடரும் என்று கூறப்படுகிறது.

குவீன்
கங்கனா நடிப்பில் அண்மையில் வெளியான குவீன் படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் அவர். இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











