Kangana Ranaut: “சார் யாரு... அமெரிக்க மாப்பிள்ளையா...?” ஜோடியாக வலம் வரும் கங்கனா ரனாவத்..!
மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத், தற்போது எமர்ஜென்ஸி படத்தை இயக்கி நடித்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2, தேஜாஸ் படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இந்நிலையில், மும்பையில் தனது பாய் ப்ரெண்டுடன் கங்கனா ரனாவத் ஜோடியாக வலம் வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஜோடியாக வலம் வரும் கங்கனா ரனாவத்
இந்தியில் 2006ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படம் மூலம் அடியெடுத்து வைத்தார். ஆனாலும் தமிழை விட இந்தியில் தான் கங்கனா ரனாவத்துக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக நெட்டிசன்களால் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

அதாவது அரசியல் ரீதியாக அடிக்கடி கருத்துகளை வெளியிடும் அவர், அதனால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதனால், கங்கனா நடிப்பில் வெளியான தக்கட், தேஜாஸ் போன்ற படங்களும் மிக மோசமான தோல்வியை தழுவின. விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிக மோசமான அடி வாங்கியது. தமிழிலும் அவர் கடைசியாக நடித்திருந்த சந்திரமுகி 2ம் பாகம் மொத்தமாக சோலி முடிந்தது.
குறிப்பாக கங்கனாவின் நடிப்பையும் நெட்டிசன்கள் விட்டு வைக்காமல் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது பாய் ஃப்ரெண்டுடன் வலம் வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையில் இருவரும் ஜோடியாக வலம் வந்துள்ளனர். கங்கனாவுடன் வலம் வரும் இளைஞர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் கங்கனா திருமணம் செய்துகொள்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இதுபற்றி கங்கனா ரனாவத் வெளிப்படையாக ஏதும் அறிவிக்கவில்லை என்றாலும், அடிக்கடி தனது திருமணம் பற்றி பேசி வருகிறார். தேஜாஸ் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கூட நான் தனியாக இல்லை என்பதாகவும், குடும்ப வாழ்க்கை பற்றியும் பேசியிருந்ததை ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். எனவே இந்தாண்டுக்குள் கங்கனா ரனாவத் திருமணம் செய்துகொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாஜகவில் முக்கிய உறுப்பினராக இருக்கும் கங்கனா ரனாவத் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டிருக்கிறது. மேலும், பில்கிஸ் பானுவின் கதையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தது வைரலானது. இந்தப் படத்திற்கான திரைக்கதையை கடந்த மூன்று ஆண்டுகளாக தயார் செய்து வருவதாக அவர் கூறியிருந்தார். இந்த கதையில் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதால், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் கங்கனாவின் ஆசைக்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











