எமர்ஜென்சி படத்துக்காக படாதபாடு படும் கங்கனா.. வீட்டை விற்றுவிட்டதாக புலம்பல்

மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர்.மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சூழல் இப்படி இருக்க எமர்ஜென்சி படம் குறித்து ரொம்பவே எமோஷனலாக பேசியிருக்கிறார் அவர்.

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.

kangana ranaut emergency

தமிழில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழிலும் எண்ட்ரி கொடுத்தார். ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் கங்கனா. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர் தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் காலை வாரியது. அதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதுவும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

கங்கனாவின் ஓபன் டாக்: கங்கனா ரணாவத் தனது மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அவர் ஓபனாக பேசுவது அவருக்கு எதிராகவே பல சமயங்கள் திரும்பியிருக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது என பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் பலத்த கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்.

எம்.பி கங்கனா: கங்கனா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டார் அவர். தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட அவர் அப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எமர்ஜென்சி: சூழல் இப்படி இருக்க அவர் எமர்ஜென்சி படம் குறித்து பேசிய அவர், " எனது படங்கள் எப்போதும் நல்ல பட்ஜெட்டில்தான் தயாரிக்கப்படும். ஆனால் எமர்ஜென்சி படத்துக்காக நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.முக்கியமாக இந்தப் படத்துக்காக நான் எனது வீட்டையே விற்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. இந்தப் படத்தின் ரிலீஸ் தாமதமானது எல்லோரின் நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது. படம் எப்போது ரிலீஸாகும் என்றுதான் எல்லோரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது” என்றார். முன்னதாக இந்தப் படம் கடந்த வருடமே முடிக்கப்பட்டாலும் தணிக்கை குழுவினர் தணிக்கை தர மறுத்ததால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. தற்போது அந்தப் படமானது ஒருவழியாக ஜனவரி 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X