சென்னை கடற்கரையில் கால் நனைத்த கங்கனா ரனாவத்.. விறு விறுப்பாக நடைபெறும் தலைவி ஷூட்டிங்!
Recommended Video
சென்னை: சென்னை கடற்கரையில் கால் நனைத்தபடி எடுத்த புகைப்படத்தை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது.
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியுடன்
ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரனாவத், தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரீட்சையமானவர். தாம் தூம் படத்தில் குறும்புக்கார பெண்ணாக நடித்த கங்கனா ரனாவத், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது மீண்டும் தமிழில் ஜெயலலிதாவின் பயோபிக் மூலம் தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

கடின உழைப்பு
குயின் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத், தொடர்ந்து பாலிவுட்டில் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார். ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாறு படமான மணிகர்ணிகா பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சின்சியர்
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் விஷேச ஹோம் ஒர்க்கை நடிகை கங்கனா ரனாவத் செய்து வருகிறார். தலைவி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார். ஜெயலலிதா பரதநாட்டியத்தில் வல்லவர் என்பதால், பரத கலையையும் கங்கனா பயின்றுள்ளார். சமீபத்தில் அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

சென்னையில் முகாம்
தலைவி படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் முகாமிட்டுள்ளார் கங்கனா ரனாவத். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் தலைவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன. சென்னையை சுற்றிப் பார்த்து வரும் கங்கனாவுக்கு சென்னை ரொம்ப பிடித்து உள்ளதாகவும் தெரிவித்தார். ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரத்தில் சென்னையை சுற்றி ஒரு ரவுண்டு வருகிறாராம்.
கடற்கரையியில் கால் நனைத்து
சென்னை டு பாண்டிச்சேரி செல்லும் வழியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் கால் நனைத்தபடி நடிகை கங்கனா ரனாவத் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தலைவி. சுடிதாரில் சாதாரண பெண்ணாக க்யூட்டாக இருக்கும் கங்கனாவின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











