‘தலைவி’க்கே இப்படியொரு நிலைமையா.. வருமான வரி கட்டாத கங்கனா ரனாவத்.. ஏன் தெரியுமா?
மும்பை: நடிகை கங்கனா ரனாவத் தன்னால் சரியாக வருமான வரி கட்ட முடியவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை அதிரடியாக முன் வைத்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சமீபத்தில் மீண்டுள்ள அவர் வருமான வரி கட்ட முடியாமல் போனதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

சர்ச்சை குயின்
குயின், மணிகர்ணிகா, பாங்கா உள்ளிட்ட படங்களுக்காக தேசிய விருதுகளை அள்ளி உள்ள இந்த பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை குயினாகவும் வலம் வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் உடன் மோதல், மும்பை மாநகராட்சி உடன் சண்டை என ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியவர் கங்கனா ரனாவத்.

துரத்திய ட்விட்டர்
ட்விட்டரில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு அதன் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் கங்கனா ரனாவத் எனக் கூறி கங்கனாவின் கணக்கை அதிரடியாக முடக்கியது ட்விட்டர் நிர்வாகம். ட்விட்டர் இல்லை என்றால் என்ன இன்ஸ்டாகிராமில் என் கருத்துக்களை பதிவிடுகிறேன் என பதிவிட்டு வருகிறார் கங்கனா.

வரி கட்டவில்லை
இந்நிலையில், தற்போது அடுத்த சர்ச்சையாக கடந்த ஆண்டு பாதிக்கும் மேல் வருமான வரியை செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார் இந்த தாம்தூம் நடிகை. மேலும், அதற்காக அரசாங்கம் தனக்கு அபராதம் விதித்தாலும் கூட பரவாயில்லை என கங்கனா கூறியுள்ளார்.

ஏன் கட்டவில்லை
இயக்குநர் ஏ.எல் விஜய்யின் தலைவி படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத் கடந்த ஓராண்டாக எந்தவொரு வேலையையும் தான் செய்யவில்லை என்றும், தனக்கு வருமானம் வராத காரணத்தினால் தான் தன்னால் வரியை முழுமையாக கட்ட முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

வரிசையாக படங்கள்
கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. மேலும், தேஜாஸ், மணிகர்ணிகா ரிட்டர்ன்ஸ், தாக்கட் மற்றும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட படங்களும் வரிசைக் கட்டி நிற்கிறது. ஆனால், கங்கனா ரனாவத் இப்படி பஞ்ச பாட்டு பாடுகிறாரே என பாலிவுட்டில் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











