இப்படி பண்ணலாமா தலைவி.. உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ போட்ட கங்கனா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கங்கனா ரனாவத் உள்ளாடையுடன் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், திடீரென இந்த அளவுக்கு கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆக்ஷன் மற்றும் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த கங்கனா ரனாவத் மீண்டும் கவர்ச்சி பக்கம் தனது ரூட்டை திருப்ப விடுக்கும் சிக்னல் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சர்ச்சை நாயகி
ஒட்டுமொத்த பாலிவுட்டையே ஒரே ஆளாக எதிர்த்து நின்று சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் நடிகை கங்கனா ரனாவத். ஹிரித்திக் ரோஷன் உடன் மோதல், சுஷாந்த் சிங்குக்கு நீதி கேட்டு போராட்டம், பாஜகவுக்கு ஆதரவு என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார் கங்கனா ரனாவத்.

மகாராஷ்ட்ரா அரசுடன் மோதல்
மும்பை, பாலிவுட் மற்றும் மகாராஷ்ட்ரா அரசுடன் நேரடி மோதல் போக்கில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகள் அனுமதியின்றி கட்டப்பட்டு இருப்பதாக மும்பை மாநகராட்சி இடித்த காட்சிகளும் அரங்கேறின.

பாலிவுட் மாஃபியா
பாலிவுட்டில் நடித்துக் கொண்டே ஒட்டுமொத்த பாலிவுட்டும் மாஃபியாவின் கீழ் செயல்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டையும் முன் வைத்து ஏகப்பட்ட பிரபலங்களிடம் விரோதம் வளர்த்துக் கொண்டார். பாலிவுட் வாரிசு நடிகர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும் நெபோடிசம் பிரச்சனை தான் சுஷாந்த் சிங்கை கொன்றதாகவும் கொதித்தெழுந்தார்.

ஜெயலலிதாவாக
பாலிவுட்டில் பிரச்சனை முற்றி வந்த நிலையில், சட்டென கோலிவுட்டில் மீண்டும் கால்பதித்து இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவாகவே நடித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

தள்ளிப் போன ரிலீஸ்
கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை பல ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டன. ஆனால், இன்னமும் அந்த படம் எப்பொது வெளியாகும் என்கிற அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஒடிடியில் வெளியாகுமா? இல்லை தியேட்டரில் வெளியாகுமா? என்றும் தெரியவில்லை.

கொரோனாவை வெல்வேன்
முதலில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் நோயே இல்லை என வாதாடி வந்த கங்கனா ரனாவத்துக்கும் கொரோனா தாக்கியது. தனது சொந்த ஊரான ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சென்று வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு கொரோனாவை நிச்சயம் வெல்வேன் என சபதம் போட்ட கங்கனா ரனாவத், சில வாரங்களுக்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்தார்.

ஹாட்னஸ் அலர்ட்
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் திடீரென உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக இருக்கும் தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவரையும் திக்குமுக்காட செய்திருக்கிறார். மீண்டும் கவர்ச்சி பக்கம் தான் திரும்பி விட்டேன் என்பதை உணர்த்தும் விதமாகவே இப்படி கங்கனா ரனாவத் போட்டோக்களை பதிவிட்டு இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video

படு மோசம்
தலைவியாக நடித்து விட்டு இப்படி ஆபாசமாக போட்டோக்களை ஷேர் பண்றீங்களே ரொம்ப மோசம் கங்கனா ரனாவத் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர். இப்படி எல்லாம் போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நிலைமைக்கு ஆகிடுச்சே கங்கனா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

கிழவி மாறி இருக்கீங்க
மேலும், கவர்ச்சியாக உடை அணிந்தாலும் முகத்தில் பொலிவு இல்லையே என்றும், சிரிக்காமல் முறைத்துக் கொண்டு என்ன போஸ் இது என்றும், கிழவி மாறி இருக்கீங்க.. ஆன்ட்டி கங்கனா என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











